நம்ம சண்டையை அப்புறம் வச்சுக்குவோம்யா!!
கோயம்பத்தூர்:
தேர்தல் பிரச்சாரம் தொடர்பாக விவாதிக்க நடத்தப்பட்ட காங்கிரஸ் செயல் வீரர்கள் கூட்டம் வேட்பாளர் எதிர்ப்புக் கூட்டமாகமாறியது.
நீலகிரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஆர்.பிரபுவை கடுமையாக விமர்சித்து தொண்டர்கள் ஒருமையில் பேசியதால் அக்கூட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
நீலகிரி தொகுதிக்காக டெல்லி வரை சென்று முட்டி மோதிப் பார்த்த எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம், சீட் கிடைக்காததால்அதிருப்தியுடன் உள்ளார். வாசனின் தீவிர ஆதரவாளராக இருந்தாலும் கூட பிரபுவின் டெல்லி செல்வாக்குக்கு முன் எஸ்.ஆர்.பி.காணாமல் போய்விட்டார்.
இந் நிலையில் பிரச்சாரத்தில் ஈடுபாடு காட்டாமல் இருந்து வரும் எஸ்.ஆர்.பி., பேச்சுக்காக காங்கிரஸ் கட்சித் தொண்டர்களின்கூட்டதுக்கு கோவையில் ஏற்பாடு செய்தார். பெரும்பாலும் வாசன்-எஸ்.ஆர்.பியின் ஆதரவாளர்களே கூடிய அக் கூட்டத்தில்பிரபுவின் ஆதரவாளர்கள் சிலரும் கலந்து கொண்டனர்.
இதில் தேர்தல் பிரச்சாரம் குறித்தும், தேர்தல் பணிகள் குறித்தும் ஏதும் பேசப்படவே இல்லை. பிரபுவை விமர்சித்தே அனைவரும்முழுக்க முழுக்க பேசினர். இதனால் பிரபுவின் ஆதரவாளர்கள் சங்கடத்தில் நெளிந்தனர்.
அவர்கள் பதிலுக்கு பேச நினைத்தாலும் அங்கு கூடியிருந்த எஸ்.ஆர்.பியின் ஆட்களின் எண்ணிக்கையைப் பார்த்துவிட்டு,பேசாமல் உட்கார்ந்து கொண்டனர்.
இவர்கள் ஏதாவது பேசுவாகர்கள், வேட்டிகளைக் கிழித்து அனுப்பலாம் என்று எதிர்பார்த்து, அவர்களைத் தூண்டி விடுவதற்காகபிரபுவை வாய்க்கு வந்தபடி எஸ்.ஆர்.பி. ஆதரவாளர்கள் திட்டிக் கொண்டிருக்க, வேட்டிகளைக் காத்துக் கொள்ளும் நோக்கத்தில்எந்த ரியாக்ஷனையும் காட்டாமல் ஒடுங்கிப் போய் உட்கார்ந்து இருந்தனர் பிரபுவின் ஆட்கள்.
ரொம்ப ஓவராக பிரபுவுக்கு திட்டு விழவே, தைரியமாய் எழுந்தார் பிரபுவின் ஆதரவாளரான கோவை நகர் மாவட்ட காங்கிரஸ்தலைவரான கோவை தங்கம். நா தழுதழுக்க, கையை தலைக்கு மேல் உயர்த்தி, ஒரு பெரிய கும்பிடு போட்டார்.
ஐயா.. சாமிகளா.. நம்ம எப்படியும் சண்டை போடத்தான் போறோம். அதை தேர்தலுக்குப் பின்னாடி வச்சுக்குவோம்யா.. இப்போவேண்டாம்யா என்று கைகூப்பி கெஞ்ச, அத்தோடு பிரபுவுதைத் திட்டுவதை நிறுத்திவிட்டுக் கலைந்தது கூட்டம்.
-
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு












Click it and Unblock the Notifications