தி.கவும் பிரசாரத்தில் தீவிரமாக குதிக்கிறது
சென்னை:
ஜனநாயக முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக திராவிடர் கழகம் தீவிர பிரசாரத்தில்ஈடுபடவுள்ளது.
ஒவ்வொரு தேர்தலின்போதும் ஒரு கூட்டணியை ஆதரிக்கும் திராவிடர் கழகம் இந்த முறை திமுக தலைமையிலானஜனநாயக முற்போக்குக் கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.
இந் நிலையில் சனிக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய தி.க. தலைவர் கி.வீரமணி, மதவாத பாஜக போட்டியிடும்7 தொகுதிகளிலும் நானே தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட உள்ளேன்.
இது தவிர திருச்சி, வேலூர் தொகுதிகளிலும் நான் தீவிரப் பிரசாரம் மேற்கொள்ளவுள்ளேன். நேரம் கிடைத்தால்மேலும் சில தொகுதிகளில் நான் நேரடியாகப் பிரசாரம் செய்வேன்.
வரும் 25ம் தேதி தொடங்கி 30 வரையிலும் பிரசாரம் செய்வேன். அதன் பிறகு மே 3ம் தேதி தொடங்கி 7ம் தேதிவரை இரண்டாவது கட்டமாக பிரசாரம் செய்வேன்.
மதவாத பாஜகதான் எனது எதிரி. அந்தக் கட்சியின் கொள்கைகள் மக்கள் விரோதமானவை. காங்கிரஸ் தலைவர்சோனியா காந்தியை குறிவைத்து அக்கட்சி பிரசாரம் செய்வது அபத்தமாக உள்ளது. சோனியா காந்தியின்பிறப்பிடம் குறித்து விவாதிக்க இது சரியான நேரம் அல்ல, அது தேவையும் அல்ல. அவர் இந்தியர்தான் என்பதைஉச்ச நீதிமன்றமே அங்கீகரித்து விட்டதால் அது குறித்து பேசக் கூடாது என்றார் கி.வீரமணி.
பின்னர் இரவு கோபாலபுரத்தில் உள்ள திமுக தலைவர் கருணாநிதியின் வீட்டுக்குச் சென்றார் வீரமணி. அங்குகருணாநிதியை சந்தித்து தி.க.வின் ஆதரவைத் தெரிவித்தார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
விஜய் கையில் எடுக்கப்போகும் 2 மெகா திட்டங்கள்.. ஆதவ் அர்ஜுனா சர்ப்ரைஸ் அப்டேட் -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
சென்னையில் வெடிக்கும் பிரியா vs விஜய் மோதல்.. மேயர் - முதல்வர் இடையே மறைமுக யுத்தம்.. என்ன காரணம்? -
Hey Everybody! ‘முதல்வன்’ அர்ஜுனான தவெக சமஉக்கள்! கேமராவைக் கண்டு அலறும் ஆபீசர்ஸ்! தவெகவுக்கு தலைவலி -
5,000 பேர் மட்டும் தான்.. திருச்சி கிழக்கில் விஜய் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications