கம்பம்: அதிமுக - திமுக கூட்டணியினரிடையே மோதல்
கம்பம்:
கம்பம் அருகே திமுக கூட்டணியினரும், அதிமுக கூட்டணியினரும் பயங்கர ஆயுதங்களுடன் மோதிக் கொண்டனர்.
பெரியகுளம் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஆருண், கம்பம் அருகே சுருளிப்பட்டியில் இரவு 11 மணிக்கு சைகை மூலமாகவாக்கு கேட்டார்.
இதற்கு அதிமுக மற்றும் -பாஜகவினர் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தார்கள். ஆருண் வந்த காரை மறித்து நிறுத்தி தகராறுசெய்தனர். காரில் கட்டப்பட்டு இருந்த கொடிகளை கிழித்தனர். மேலும் ஆருணையும் தாக்க முயற்சி செய்தனர்.
அதனால் ஆருண் தொடர்ந்து பிரசாரம் செய்யாமல் அங்கிருந்து கிளம்பி விட்டார். இதனைக் கண்ட திமுகவினர் அதிமுககூட்டணியினரை தட்டிக் கேட்டனர். அதனால் இரு தரப்பினரிடையே மோதல் வெடித்தது. கத்தி, கம்பு, கற்களைக் கொண்டுஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டார்கள். இதில் இரு தரப்பிலும் 11 பேர் காயம் அடைந்தார்கள்.
முதல்வர் ஜெயலலிதா பிரசாரத்தின் பாதுகாப்பு பணிக்கு சென்றுவிட்டதால் 2 போலீசார் மட்டுமே அங்கு இருந்தார்கள்.அவர்களால் இந்த மோதலை கட்டுப்படுத்த முடியவில்லை. இது பற்றி அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தனர்.
இதனையடுத்து மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர் அமல்ராஜ் தலைமையில் போலீஸ் படை விரைந்து வந்தது. அவர்கள்மோதலை அடக்கி இது தொடர்பாக பாஜகவைச் சேர்ந்த ரவிக்குமார் (32), செல்வம் (33), அதிமுகவை சேர்ந்த செல்வம் (37),முருகன் (40), கார்மேகம் (48) ஆகிய 5 பேர் மீதும் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்தனர்.
திமுகவைச் சேர்ந்த ஜெகன்நாதன் (39), சரவணன் (30), கிருஷ்ணன் (35), குபேந்திரன், ராஜேந்திரன் ஆகியோர் மீதும் வழக்குபதிவு செய்து 8 பேரை கைது செய்தார்கள். இது குறித்து ராயப்பன்பட்டி போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
-
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
மாடு பலியிட தடை.. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்! அமைச்சர் ஷாஜஹான் உறுதி -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications