வீரப்பன் கூட்டாளிகளின் கருனை மனு: ஜனாதிபதியை இன்னும் அடையவில்லை
டெல்லி:
வீரப்பன் கூட்டாளிகளின் கருணை மனு குடியரசுத் தலைவர் மாளிகையை வந்தடையவில்லை என்று குடியரசுத்தலைவர் அப்துல் கலாமின் செய்தித் தொடர்பாளர் கான் தெரிவித்தார்.
1993ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் பாலாறு அருகே நடந்த கண்ணிவெடி தாக்குதலில் கர்நாடக போலீஸார் உள்பட21 பேர் கொல்லப்பட்டனர். இது தொடர்பாக வீரப்பன் கூட்டாளிகள் சைமன், ஞானபிரகாஷ், மாதய்யா,பிலேந்திரா ஆகியோர் பிடிபட்டனர். இவர்களுக்கு மைசூர் தடா நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கியது.
இதை எதிர்த்து 4 பேரும் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். இதனை விசாரித்த உச்ச நீதிமன்றம் 4பேரின் ஆயுள் தண்டனையை தூக்கு தண்டனையாக மாற்றி தீர்ப்பளித்தது. இதனையடுத்து, 4 பேரும் குடியரசுத்தலைவருக்குக் கருணை மனு அனுப்பினர்.
கருணை மனு தொடர்பாக குடியரசுத் தலைவர் அலுவலகத்தில் இருந்து பதில் வராததால் 16ம் தேதிநிறைவேற்றப்பட வேண்டிய தூக்குத் தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டது. இந் நிலையில், அப்துல் கலாமின் செய்தித்தொடர்பாளர் கான் செய்தியாளர்களிடம்,
4 பேரின் கருணை மனுவும் குடியரசுத் தலைவருக்கு இன்னும் வந்து சேரவில்லை. முதல் கட்டமாக உள்துறையிடம்கருத்து கேட்கப்படும். அதன் பின்னரே குடியரசுத் தலைவருக்கு கருணை மனுக்கள் வரும் என்று கூறினார்.
-
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications