40 சிறார் போராளிகளை விடுவித்த விடுதலைப் புலிகள்
கொழும்பு:
விடுதலைப் புலிகள் தமது படையிலிருந்து மேலும் 40 சிறார் போராளிகளை விடுவித்துள்ளனர்.
இதனையடுத்து அவர்களால் விடுவிக்கப்பட்ட சிறார் போராளிகளின் எண்ணிக்கை 299 ஆகியுள்ளது.
இத் தகவலை புலிகளின் "தமிழ்நெட் இணைய தளம் வெளியிட்டுள்ளது. இப்போது விடுதலைப் புலிகள்விடுவித்துள்ள சிறார் போராளிகளில் 31 பேர் சிறுமிகள்; 9 பேர் சிறுவர்கள் ஆவார்.
கருணா கோஷ்க்கு மன்னிப்பு:
தலைமறைவாகியுள்ள கருணாவின் ஆதரவு கோஷ்டியினருக்கு மன்னிப்பு வழங்கப்படும் என்றும் புலிகள் இயக்கம்அறிவித்துள்ளது.
இது குறித்து விடுதலைப் புலிகள் இயக்கத்தின் கிழக்கு பகுதி புதிய கமாண்டர் தம்பிராஜா ரமேஷ் கூறுயிைல்,கருணாவின் துரோகச் செயல்களுக்குத் துணை போனவர்களை பழி வாங்க மாட்டோம். கருணாவின்கட்டுப்பாட்டில் இருந்த கிழக்குப் பகுதியில் புலிகளின் போலீஸ் நிலையங்கள், நீதிமன்றங்கள் மீண்டும்அமைக்கப்பட்டு வருகின்றன என்றார்.
இதற்கிடையே கருணா கோஷ்டி தலைமறைவான பின்பு அவர்கள் வைத்திருந்த ஆயுதங்கள், வாகனங்களைக்கொள்ளையடித்தவர்கள் உடனே அவற்றை தங்கள் வசம் ஒப்படைக்க வேண்டும் என்றும் புலிகள் இயக்கம்எச்சரித்துள்ளது.
கருணாவை கொல்வது உறுதி:
இந் நிலையில் கருணாவை விடுதலைப் புலிகள் கொல்வது உறுதி என்று இலங்கையில் இருந்து வெளியாகும்சண்டே லீடர் என்ற பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.
அந்த இதழ் கூறியிருப்பதாவது: புலிகளின் உளவுப் பிரிவைச் சேர்ந்த நீலனை கருணா சுட்டுக் கொன்றதன் மூலம்புலிகள் தலைவர் பிரபாகரனுடன் அவர் செய்துகொண்டிருந்த ரகசிய ஒப்பந்தத்தை மீறியுள்ளார். எனவே,கருணாவை தேடிக் கண்டுபிடித்து விடுதலைப் புலிகள் கொல்வது உறுதி என்று கூறப்பட்டுள்ளது.
-
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
மாடு பலியிட தடை.. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்! அமைச்சர் ஷாஜஹான் உறுதி -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications