தனிப்பட்ட பிரச்சனையை அரசியலாக்குவதா?: ரஜினிக்கு பாரதிராஜா கண்டனம்
தேனி:
ராமதாஸ் மீதான தனிப்பட்ட விரோதத்தை ரஜினி அரசியலாக்குவது சரியல்ல என்று இயக்குனர்பாரதிராஜா கூறியுள்ளார்.
காவிரிப் பிரச்சனையில் தமிழகத்துக்கு எதிராக கர்நாடக நடிகர்-நடிகைகள் களத்தில்குதித்ததையடுத்து பாரதிராஜா தலைமையில் அதற்கு எதிராக தமிழ்த் திரையுலகம் திரண்டது.
பாரதிராஜா தலைமையில் நெய்வேலியில் நடந்த மாபெரும் கண்டன ஊர்வலத்தை ரஜினி மட்டும்புறக்கணித்தார். தனியாக சென்னையில் உண்ணாவிரதம் உட்கார்ந்தார்.
அப்போது ரஜினியை மிகக் கடுமையாக விமர்சித்தார் பாரதிராஜா. காவிரி விஷயத்தில் திரையுலகஒற்றுமையையே குலைக்க ரஜினி சதி செய்வதாகக் கூறியிருந்தார்.
இந் நிலையில் தனது சொந்த ஊரான அல்லிநகரம் வந்த பாரதிராஜா தேனியில் நிருபர்களைசந்தித்தார். அவர் கூறியதாவது:
ராமதாஸ்- ரஜினி இடையே இருப்பது தனிப்பட்ட விரோதம். இதை ரஜினி அரசியலாக்கிவிட்டார்.ராமதாஸை ரஜினி கொள்கைரீதியில் எதிர்த்திருக்க வேண்டும். அதைவிட்டுவிட்டு இதில் அரசியல்செய்திருக்கக் கூடாது.
சினிமாவுக்கு சமூகப் பொறுப்பு உண்டு. அதில் இழிவான செயல்களை (புகை பிடித்தல், குடித்தல்)காட்டும்போது அதை சில அப்பாவி ரசிகர்கள் பின்பற்றிவிடுகிறார்கள். அதைத் தடுக்க வேண்டும்என்று ராமதாஸ் கூறியது சரியானது தான்.
அது நல்ல யோசனை தான். அதற்காக சினிமாவையே ராமதாஸ் மொத்தமாக தாக்கிக்கொண்டிருப்பது ஏற்கத் தக்கதல்ல.
நதிகள் தேசியமயமாக்கப்படும் பிரச்சனை இன்று நேற்று அல்ல, பல ஆண்டுகளாகவே பேசப்பட்டுவரும் ஒரு விஷயம் என்றார் பாரதிராஜா.
அதிமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வீர்களா என்று கேட்டபோது, எம்.ஜி.ஆர்.ஆண்டிப்பட்டியில் போட்டியிட்டபோது சிகிச்சைக்காக அமெரிக்காவில் இருந்தார். அனால் அன்றுஇங்கு பிரச்சாரம் செய்தேன்.
இப்போது முதல்வர் ஜெயலலிதா முழு பலத்துடன் இருக்கிறார். அவருக்கு எனது பலம் தேவையேஇல்லை என்றார் பாரதிராஜா.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
விஜய் கையில் எடுக்கப்போகும் 2 மெகா திட்டங்கள்.. ஆதவ் அர்ஜுனா சர்ப்ரைஸ் அப்டேட் -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
"உண்மையை சொல்ல தைரியம் இல்லை".. ஜனநாயகன் ரிலீஸ் எப்போது? நொந்துபோய் எச் வினோத் சொன்ன பதில்












Click it and Unblock the Notifications