தினகரன் இந்திய குடிமகனா?: ஆய்வு செய்ய தேர்தல் கமிஷன் உத்தரவு

Subscribe to Oneindia Tamil

மதுரை:

பெரியகுளம் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளரும் சசிகலாவின் அக்காள் மகனுமானதினகரன் இந்தியக் குடிமகனா அல்லது சிங்கப்பூர் குடிமகனா என்று அவரது பாஸ்போர்ட்டை வாங்கிஉடனடியாகச் சோதனையிடுமாறு தமிழக தேர்தல் ஆணையருக்கு தலைமைத் தேர்தல் கமிஷன்உத்தரவிட்டுள்ளது.

அன்னிய செலாவணி வழக்கில் சிக்கிய தினகரன், இந்த வழக்கு விசாரணையின்போது, தான் ஒருசிங்கப்பூர் பிரஜை என்றும், இதனால் வெளிநாட்டில் முதலீடு செய்ய இந்திய ரிசர்வ் வங்கியின்அனுமதி தேவையில்லை என்றும் கூறியிருந்தார்.

இந் நிலையில் பெரியகுளத்தில் மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டார். அப்போது ஜனதா கட்சித்தலைவர் சுப்பிரமணியம் சுவாமி இந்தப் பிரச்சனையைக் கிளப்பினார். சிங்கப்பூர் பிரஜையானதினகரன் எப்படி பெரியகுளத்தில் போட்டியிடலாம் என்று கேள்வி எழுப்பினார்.

தினகரனுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கும் பதிவானது. ஆனால், தினகரனின் பெயர்தமிழக வாக்காளர் பட்டியலில் இருப்பதால் அவர் போட்டியிட தடையில்லை என்று நீதிமன்றம்கருத்துத் தெரிவித்தது.

இந் நிலையில் இப்போது மீண்டும் இந்தப் பிரச்சனையை சுவாமி கிளப்பியுள்ளார். நேரடியாகதேர்தல் கமிஷனிடமே அவர் இந்த புகாரைக் கொடுத்தார்.

இதையடுத்து தினகரனின் குடியுரிமை குறித்து அவரது பாஸ்போர்ட்டை உடனடியாக வாங்கி ஆய்வுசெய்யுமாறு தமிழக தேர்தல் ஆணையர் மிருத்யுஞ்சய் சாரங்கிக்கு தலைமைத் தேர்தல் ஆணையம்உத்தரவிட்டுள்ளது.

இத் தகவலை சுவாமியே இன்று நிருபர்களிடம் தெரிவித்தார்.

தினகரனின் பிடிவாரண்ட் ரத்து:

இதற்கிடையே தினகரன் மீதான அன்னிய செலாவணி மோசடி வழக்கில் அவருக்கு எதிராகப் பிறப்பிக்கப்பட்ட பிடிவாரண் ரத்துசெய்யப்பட்டுள்ளது.

தினகரன் மீது கடந்த 1996ம் ஆண்டு ரூ.1.44 லட்சம் அன்னிய செலாவணி மோசடி செய்ததாக அமலாக்கப் பிரிவு துறையினர் சென்னைஎழும்பூர் பொருளாதார குற்றவியல் 2வது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை நீதிபதி பெருமாள் விசாரித்துவருகிறார்.

நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது தினகரன் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. அவரது வழக்கறிஞரும்ஆஜராகவில்லை.

இதையடுத்து தினகரனைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நீதிபதி பெருமாள் பிடிவாரண்ட் பிறப்பித்தார். இந் நிலையில்தினகரனின் வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் ஆஜராகி,

தங்களது டைரியில் வழக்கு விசாரணை தேதியை 19க்கு பதில் தவறுதலாக 29 எனக் குறித்த காரணத்தால் நீதிமன்றத்தில்ஆஜராக முடியவில்லை. எனவே பிடிவாரண்டை ரத்து செய்ய வேண்டும் என்று கோரினர்.

அதை ஏற்ற நீதிபதி பெருமாள் பிடிவாரண்டை ரத்து செய்து உத்தரவிட்டார். வழக்கு விசாரணையை அடுத்த மாதம் 14ம் தேதிக்குஒத்தி வைத்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+