சோனியா குறித்து அவதூறு: ஜெவுக்கு நோட்டீஸ்
திருச்சி :
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி குறித்து தெரிவித்த கருத்து தொடர்பாக தொடரப்பட்டுள்ள வழக்கில் முதல்வர்ஜெயலலிதாவுக்கு திருச்சி முன்சீப் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
திருச்சியில் நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தின்போது சோனியா காந்தி குறித்து ஜெயலலிதா விமர்சனம்செய்திருந்தார். இதை எதிர்த்து திமுகவைச் சேர்ந்த செங்கசோலை, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சின்னத்துரை,துரைராஜ், கோவிந்தசாமி ஆகியோர் திருச்சி முன்சீப் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.
தங்களது மனுவில் சோனியா காந்திக்கு 1984ம் ஆண்டே இந்தியக் குடியுரிமை வழங்கப்பட்டு விட்டது. எனவேஅவர் வெளிநாட்டவர் என்று கூற முடியாது. மேலும், உச்ச நீதிமன்றம் இதை உறுதி செய்துள்ளது. எனவேசோனியா காந்தியை வெளிநாட்டவர் என்று ஜெயலலிதா கூறுவது அவதூறை ஏற்படுத்தும் பேச்சாகும். மேலும்,தேர்தல் ஆணைய விதிமுறைகளை மீறும் செயலாகும்.
எனவே ஜெயலலிதா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டிருந்தது. மனுவை விசாரித்தநீதிபதி கலாவதி, மே 21ம் தேதிக்குள் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு ஜெயலலிதாவுக்குஉத்தரவிட்டார்.
-
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
மாடு பலியிட தடை.. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்! அமைச்சர் ஷாஜஹான் உறுதி -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications