முதல் கட்ட தேர்தலில் பெரும் வன்முறை: 55 சதவீத வாக்கு பதிவு- 15 பேர் பலி

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

நாட்டின் 14வது மக்களவைக்கான முதல் கட்ட வாக்குப் பதிவு வன்முறைகளுடன் இன்று நடந்துமுடிந்தது.

காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப் பதிவு மாலை 5 மணிக்கு முடிந்தது. சராசரியாக 50 முதல்55 சதவீத வாக்குகள் பதிவாகின.

வாக்குப் பதிவின்போது நடந்த வன்முறைகளில் 6 துணை ராணுவப் படை வீரர்கள், ஒரு நிருபர்,தேர்தல் அதிகாரி, ஒரு போலீஸ்காரர், ஒரு நக்ஸலைட், லாலு கட்சியின் தொண்டர்கள் இருவர்உள்பட மொத்தம் 15 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

யஷ்வந்த் சின்ஹா, ஒமர் மீது தாக்குதல்:

ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் யஷ்வந்த் சின்ஹாவின் கார்மீது பயங்கர தாக்குதல் நடந்தது. இதில் அவரது கார் பலத்த சேதமடைந்தது. ஆனால், சின்ஹாகாயமின்றி தப்பிவிட்டார்.

அதே போல காஷ்மீரில் தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர் ஒமர் பரூக்கின் கார் மீதுதீவிரவாதிகள் கண்ணிவெடித் தாக்குதல் நடத்தினர். அதிர்ஷ்டவசமாக அவர் உயிர் தப்பினார்.

மொத்தமுள்ள 534 மக்களவைத் தொகுதிகளில் இன்று 13 மாநிலங்கள், மூன்று யூனியன்பிரதேசங்களில் உள்ள 140 தொகுதிகளுக்குத் தேர்தல் நடந்தது. ஆந்திரா, கர்நாடகத்தில் சட்டசபைத்தேர்தலும் நடந்தது.

குஜராத், மகாராஷ்டிரத்தில் அனைத்துத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது.ஆந்திராவில் மொத்தமுள்ள 42 மக்களவைத் தொகுதிகளில் இன்று 21 தொகுதிகளுக்கும் 147சட்டசபை தொகுதிகளுக்கும் இன்று ஓட்டுப் பதிவு நடந்தது.

கர்நாடகத்தில் உள்ள மொத்தம் 28 மக்களவைத் தொகுதிகளில் இன்று 24 தொகுதிகளுக்கும், 120சட்டசபை தொகுதிகளுக்கும் வாக்குப் பதிவு நடந்தது.

பிகார், ஒரிஸ்ஸா, சட்டீஸ்கரில் தலா 11 மக்களவைத் தொகுதிகளிலும் அஸ்ஸாம். ஜார்க்கண்ட்மாநிலங்களில் தலா 6 தொகுதிகளிலும் வாக்குப் பதிவு நடந்தது. காஷ்மீர், மேகாலயாவில் 2தொகுதிகளிலும் தாதர், டையூ தாமன், அந்தமான் ஆகிய யூனியன் பிரதேசங்கள்ல் உள்ள தலா ஒருதொகுதிகளிலும் தேர்தல் நடந்தது.

பெரும் வன்முறை:

கர்நாடகத்திலும் அஸ்ஸாமிலும் 60 சதவீத வாக்குகளும், ஆந்திராவில் 45 சதவீதமும், சட்டீஸ்கரில்40 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன. குஜராத்தில் வாக்குப் பதிவு மிகக் குறைவாகவே இருந்தது.

மணிப்பூரில் தீவிரவாதிகள் தாக்குதலில் நான்கு துணை ராணுவப் படையினர் கொல்லப்பட்டனர்.இங்கு ஒரு வாக்குச் சாவடி அதிகாரி கடத்திச் செல்லப்பட்டார்.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் வாக்குச் சாவடியைத் தாக்கி அதிகாரிகளை விரட்டிய நக்சல்கள் மீதுபோலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் ஒரு நக்ஸலைட் கொல்லப்பட்டார். ராஞ்சியில் தேர்தல்அதிகாரி ஒருவர் கிரனைட் குண்டு தாக்குதலில் உயிரிழந்தார்.

அதே போல பிகாரில் மத்திய ரயில்வே அமைச்சர் போட்டியிடும் குர்சாகிரி மக்களவைத்தொகுதியில் வாக்குப் பதிவு தொடங்கியவுடன் ஒரு வாக்குச் சாவடியின் வெளியே குண்டுவெடித்தது. இதையடுத்து அங்கு கலவரம் வெடிக்க, போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் ஒருவர்காயமடைந்தார்.

பிகாரில் ஒரு போலீகாரர் மாவோயிஸ்ட் தீவிரவாதிகளால் கடத்திச் செல்லப்பட்டு கொலைசெய்யப்பட்டார். லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரீய ஜனதா தளத் தொண்டர்கள் இருவரும் சிலரால்கடத்தப்பட்டு கொல்லப்பட்டனர்.

காஷ்மீர் மாநிலம் பாரமுல்லாவில் வாக்குச் சாவடிகளின் மீது தீவிரவாதிகள் நடத்திய கிரனைட் குண்டுதாக்குதலில் இரு வீரர்களும் ஒரு பத்திரிக்கையாளரும் பொது மக்களில் ஒருவரும் பலியாயினர்.அதே போல மிசோரமிலும் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.

கர்நாடகத்தில் ரெய்ச்சூர் மாவட்டத்தில் காங்கிரஸ் தொண்டருக்கு கத்திக் குத்து விழுந்தது.

சட்டீஸ்கர் மாநிலம் ராய்ப்பூர் நான்கு இடங்களில் நக்சலைட்டுகள் தாக்குதல் நடத்தி மின்னணுவாக்குப் பதிவு இயந்திரங்களை உடைத்துவிட்டுச் சென்றனர்.

இங்கு நக்சல்கள் வைத்த கண்ணிவெடியில் சிக்கி 4 துணை ராணுவப் படையினர் காயமடைந்தனர்.

ஒரிஸ்ஸா- ஆந்திர எல்லையில் மக்கள் போர்ப் படையைச் சேர்ந்த நக்ஸலைட்டுக்கள் எல்லைப்பாதுகாப்புப் படையினரைத் தாக்கிவிட்டு ஓட்டுச் சாவடியை சூறையாடிவிட்டுத் தப்பிவிட்டனர்.

வாக்குப் பதிவு நடந்த அனைத்து மாநிலங்களிலும் மிக பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.பதற்றம் நிறைந்த பகுதிகளில் துணை ராணுவப் படைகள் நிறுத்தப்பட்டன.

காஷ்மீர் மற்றும் அஸ்ஸாமில் 316 கம்பெனிகள் துணை ராணுவப் படைகள் குவிக்கப்பட்டன.20,000 போலீசாரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். பிகாரில் மட்டும் 6,400 வாக்குச்சாவடிகள் பதற்றம் நிறைந்தவையாக அடையாளம் காணப்பட்டு அங்கு மிக பலத்த பாதுகாப்புபோடப்பட்டிருநதது.

அதே போல கர்நாடகத்தில் 5,000 வாக்குச் சாவடிகள் பதற்றம் நிறைந்தவை என்பதால் அங்கும்போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

இந்த முறை முழுக்க, முழுக்க மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்கள் மூலமே ஓட்டுப் பதிவு நடந்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+