கட்டித் தழுவும் எம்ஜிஆர்- - ரஜினி !
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் தொகுதிக்கு யாராவது போனால் அங்கு "எம்ஜிஆரும், ரஜினிகாந்த்தும்" கை கோர்த்து பிரசாரம்செய்வதைப் பார்க்கலாம்.
திருச்செந்தூர் தொகுதியில் திமுக சார்பில், போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்ட வெங்கேடச பண்ணையாரின்மனைவி ராதிகா செல்வி போட்டியிடுகிறார். பண்ணையாரின் கொலைக்கு நியாயம் கேட்டு கைக் குழந்தையுடன்கிராமம் கிராமமாக அவர் சென்று வருவதால் அதிமுக வேட்பாளர் தாமோதரன் கதி கலங்கிப் போயுள்ளார்.
ராதிகா செல்வியின் குழந்தை சென்டிமென்ட்டை முறியடிக்க அவர் ஒரு திட்டம் தீட்டினார். எம்ஜிஆர். உருவத்தில்உள்ள சிலரை தேர்வு செய்து அவர்களை வைத்து பிரசாரம் செய்து வருகிறார். இந்த டூப்ளிகேட் எம்ஜிஆர்கள்கிராமம் கிராமமாக சென்று பாட்டுப் பாடி, நடனம் ஆடி வாக்காளர்களைக் கவருகின்றனர்.
இதேபோல, ரஜினி உருவத்தில் உள்ள சிலரும் பிரசாரக் களத்தில் குதித்துள்ளனர். மத்தியில் வாஜ்பாய் ஆட்சிஅமைய உதவுமாறு திருச்செந்தூர் வாக்காளர்களை அவர்கள் கோரி வருகின்றனர். ரஜினியின் பாடல்களுக்குவாயசைத்து நடனம் ஆடி இவர்கள் ஓட்டு கேட்கிறார்கள்.
ரஜினியின் ஆதரவை ஜெயலலிதா கண்டு கொள்ளாத காரணத்தால், எதற்கு வம்பு என்று அதிமுகவினர் இவர்களைதங்களது பிரசாரக் கூட்டத்திற்கு அழைப்பதில்லை. இருப்பினும் எங்காவது "ரஜினியும், எம்ஜிஆரும்" சந்தித்துக்கொண்டால் கை குலுக்கிக் கொண்டு கட்டித் தழுவிக் கொள்கிறார்கள்.


Click it and Unblock the Notifications
