புதிய தலைமைச் செயலகம் கட்ட உயர் நீதிமன்றம் அனுமதி
சென்னை:
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்ட தமிழக அரசுக்குஉயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட பொது நலமனுக்களை நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.
மீனவர் குப்பங்களை அகற்றிவிட்டு அங்கு தலைமைச் செயலகம் கட்ட முதல்வர் ஜெயலலிதாதிட்டமிட்டார். ஆனால், மேதா பட்கர் தலைமையில் மீனவர்கள் போராட்டத்தில் குதித்ததால் அதுதேசிய அளவில் விவகாரமாகிவிட அத் திட்டத்தை கைவிட்டார்.
அடுத்து மலேசிய நாட்டின் உதவியுடன் மகாபலிபுரம் அருகே தலைமைச் செயலகம் கட்டமுடிவானது. ஆனால், அத் திட்டமும் பெரும் பொருட் செலவு காரணமாக கைவிடப்பட்டது.
அடுத்ததாக அரசின் கண்ணில் பட்டது ராணி மேரிக் கல்லூரி. கல்லூரியையேஉடைத்தெறிந்துவிட்டு அங்கு தலைமைச் செயலகம் கட்ட ஜெயலலிதா திட்டமிட்டார். அதற்குமாணவிகள், ஆசிரியர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.
ஆனால், அதை மதிக்காமல் தலைமைச் செயலகம் கட்ட அரசு தயாராகிக் கொண்டிருந்த நிலையில்,மத்திய சுற்றுச்சூழல் அமைச்சராக இருந்த டி.ஆர். பாலு வடிவத்தில் அதற்குத் தடை வந்தது.
கடற்கரையில் ரூ. 50 கோடிக்கு மேல் செலவிட்டு ஏந்த திட்டத்தையும் நிறைவேற்ற மத்தியசுற்றுச்சூழல் துறையின் அனுமதி பெற வேண்டும் என்று உத்தரவு போட்டார் பாலு.
இதையடுத்து கோட்டூர்புரம் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் தலைமைச் செயலகம் கட்ட அரசுமுடிவு செய்தது. இதற்கு கடந்த ஆண்டு அக்டோபரில் முதல்வர் ஜெயலலிதா பூஜை நடத்திஅடிக்கல்லும் நாட்டினார்.
இந் நிலையில் அண்ணா பல்கலைக்கழகத்தில் தலைமைச் செயலகம் கட்டினால் அப் பகுதியில் பெரும்போக்குவரத்து நெரிசல் ஏற்படும், சுற்றுச்சூழலும் பாதிக்கப்படும் என்று கூறி தமிழக பொதுப்பணித்துறை முன்னாள் தலைமைப் பொறியாளர் குப்புசாமி உள்ளிட்ட சிலர், இத் திட்டத்துக்கு தடைகோரி, உயர் நீதிமன்றத்தில் பொது நல மனுக்கள் தாக்கல் செய்தனர்.
மேலும், அப் பகுதியில் உள்ள குடியிருப்போர், கல்வி நிலையங்கள் பாதிக்கப்படுவர். மேலும், மத்திய சுற்றுச்சூழல்அமைச்சகத்தின் ஒப்புதல் பெறாமல் கட்டுமானப் பணிகள் தொடங்குவது சரியல்ல. எனவே இந்தத் திட்டத்திற்குத்தடை விதிக்க வேண்டும் என்றும் அந்த மனுவில் கோயிருந்தனர்.
இந்த மனுக்களை தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டி, நீதிபதி ஞானப்பிரகாசம் ஆகியோர் அடங்கியடிவிஷன் பெஞ்ச் நேற்று தள்ளுபடி செய்துவிட்டது.
தங்களது தீர்ப்பில் நீதிபதிகள் கூறியிருப்பதாவது:
புதிய தலைமைச் செயலகம் கட்டுவது என்பது தமிழக அரசு எடுத்துள்ள கொள்கை முடிவு. மக்களால்தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசின் கொள்கை முடிவுகளை எதிர்க்கவோ, தடை கோரவோ யாருக்கும் உரிமைஇல்லை.
தனது தலைமைச் செயலகம் எங்கு அமைய வேண்டும் என்பதை நிர்ணயிக்கும் உரிமை தமிழக அரசுக்கு உண்டு.சுதந்திரமாக அது குறித்து தமிழக அரசு முடிவு செய்யலாம். புதிய இடத்திற்குச் சென்று விட்டு பின்னர் அங்கிருந்துவேறு இடத்திற்கு தலைமைச் செயலகத்தை மாற்றவும் அரசுக்கு உரிமை உண்டு.
அடிப்படை உரிமைகளை மீறாத வரையில் மாநில அரசின் முடிவுகளையும், திட்டங்களையும் யாரும் எதிர்க்கமுடியாது.
இத் திட்டத்தை எதிர்த்து தாக்கல் செய்த மனுதாரர்களின் உரிமைகள் எதுவும் புதிய தலைமைச் செயலகத்தால்பாதிக்கப்பட போவதில்லை. பொது மக்களுக்கு ஏற்படப் போகும் மிகப் பெரிய பலனை மட்டுமே கருத்தில்கொள்ள வேண்டும், சின்னச் சின்ன பிரச்சினைகளை பெரிதுபடுத்தக் கூடாது என்று கூறி மனுக்களை டிஸ்மிஸ்செய்தனர் நீதிபதிகள்.












Click it and Unblock the Notifications