சென்னையில் வாஜ்பாய், மோடி பிரசாரம்
சென்னை:
பிரதமர் வாஜ்பாய் வருகிற மே 5ம் தேதி சென்னையில் பிரசாரம் மேற்கொள்ளவுள்ளார்.
பாஜக அகில இந்திய செயலாளர் இல.கணேசன் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசுகையில், மே 5 ம் தேதிபிரதமர் வாஜ்பாய் சென்னை வருகிறார். சென்னையில் நடைபெறும் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டுபேசுகிறார்.
மே 6,7 ஆகிய தேதிகளில் துணைப் பிரதமர் அத்வானி தமிழகம் வருகிறார். இரு தினங்களிலும் அவர் சிதம்பரம்,புதுவையில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்துப் பேசுகிறார்.
மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் 7ம் தேதி நாகர்கோவிலில் பாஜக வேட்பாளர் பொன் ராதாகிருஷ்ணனைஆதரித்துப் பேசுகிறார். மத்திய அமைச்சர் முரளி மனோகர் ஜோஷி 6ம் தேதி தர்மபுரியில் பிரசாரம் செய்கிறார்.குஜராத் முதல்வர் நரேந்திர மோடி வரும் 28ம் தேதி வட சென்னையிலும், நிதியமைச்சர் ஜஸ்வந்த் சிங் 29ம் தேதிகோவை மற்றும் 30ம் தேதி நீலகிரியிலும் பிரசாரம் செய்கிறார்கள்.
வட சென்னையில் முதல்வர் ஜெயலலிதாவின் பிரசாரம் ரத்து செய்யப்படவில்லை. வாஜ்பாய் பிரசாரம்செய்யும்போது ஜெயலலிதாவும் பிரசாரம் செய்யவிருப்பதால் அது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
லக்னோ தொகுதியில் பிரதமர் வாஜ்பாய்க்கு எதிராக அவரது நண்பர் ராம்ஜெத்மலானியை காங்கிரஸ் கொம்பு சீவிவிட்டுள்ளது. இதன் மூலம் இருவரின் நட்பையும் பிளவுபடுத்தி உள்ளது காங்கிரஸ்.
கூட்டணி அரசு தொடர்பாக வாஜ்பாய் பேசியதை இங்குள்ள தலைவர்கள் வேறுவிதமாக அர்த்தம் தருகிறார்கள்.இது தவறு. தானே கடைசிவரை தலைமை தாங்க வாஜ்பாய்க்கு விருப்பமில்லை. இருப்பினும் கட்சிகட்டுப்பாட்டுக்காக தொடர்கிறார் என்றார் அவர்.
-
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது












Click it and Unblock the Notifications