சென்னை: குடிநீரை விற்பவர்களை கைது செய்ய கோரி வழக்கு
சென்னை:
சென்னை மெட்ரோ வாட்டர் நிறுவனம் மக்களுக்கு இலவசமாக விநியோகிக்கும் குடிநீரை விலைக்கு விற்கும் சமூகவிரோதிகளைக் கைது செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நலன்மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் சூர்யபிரகாசம் என்பவர் இது தொடர்பாக தாக்கல் செய்துள்ள மனுவில்,மெட்ரோ வாட்டர் நிறுவனம் சென்னை நகர மக்களுக்கு குடிநீரை விநியோகித்து வருகிறது. இந்த குடிநீர்விநியோகத்தைக் கட்டுப்படுத்தவும், விநியோகிக்கவும் மெட்ரோ வாட்டர் நிறுவனம் யாரையும் நியமிக்கவில்லை.
இதன் காரணமாக சமூக விரோதிகள், ரெளடிகள் தங்களது அரசியல் பின்னணியைப் பயன்படுத்திக் கொண்டுஇலவசமாக விநியோகிக்கப்பட வேண்டிய குடிநீரை விலைக்கு விற்கிறார்கள்.
ஒரு குடத்திற்கு குறைந்தது 1 ரூபாய் வசூலிக்கிறார்கள். இது தவிர ஒரு லாரி தண்ணீர் ரூ. 500க்கு விற்கப்படுகிறது.ஹோட்டல்களுக்கும், பொழுதுபோக்கு நிலையங்களுக்கும் இந்த இலவச தண்ணீர் விலைக்கு விற்கப்படுகிறது.
இதைத் தடுத்து இலவசமாக விநியோகிக்கப்படும் தண்ணீரை விற்பவர்களைக் கைது செய்து நடவடிக்கை எடுக்கஅரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று தனது மனுவில் கூறியிருந்தார்
மனுவை விசாரணைக்கு ஏற்ற தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டி, நீதிபதி தணிகாச்சலம் ஆகியோர் அடங்கியபெஞ்ச் இது தொடர்பாக சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.
-
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது












Click it and Unblock the Notifications