குமரியில் கன மழை: மின்னல் தாக்கி 3 பேர் பலி- உதகையில் கடும் காற்றில் வீழ்ந்தன மரங்கள்
நாகர்கோவி& ஊட்டி:
கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்த இடி, மின்னலுடன் கூடிய கடும் மழைக்கு 3 பேர் பலியாயினர்.
கன்னியாகுமரி மாவட்டம் முழுவதுமே நேற்றிரவு கன மழை பெய்தது. இடி மின்னலுடன் சில மணி நேரம் பெய்தஇந்த பலத்த மழையால் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
நாகர்கோவில், தக்கலை, மார்த்தாண்டம், திருவட்டாறு, குலசேகரம் என பல பகுதிகளிலும் கடும் மழை பெய்தது.
இதில், தக்கலை அருகே ரப்பர் தோட்டத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த இரு தொழிலாளர்கள் மின்னல் தாக்கிஉயிரிழந்தனர். இதேபோல, திருவட்டாறு பகுதியில் ஒருவரும் இடி தாக்கி இறந்தார்.
தரையில் வீழ்ந்த 150 வயது மரங்கள்:
அதே போல உதகமண்டலம் மலைப் பகுதியில்150 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்த 2 மரங்கள், கன மழைகாரணமாக வேரோடு விழுந்தன.
குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் காந்தி நகர் பகுதியில் பல பழமையான மரங்கள் கம்பீரமாக நின்றுகொண்டுள்ளன. இவற்றில் 2 மரங்கள் கடந்த சில நாட்களாக அப்பகுதியில் பெய்து வந்த கன மழையைத்தாங்காமல் சரிந்தன.
வேரோடு விழுந்த அந்த மரங்களை வனத்துறையினர் அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இந்த மரங்கள் 150ஆண்டுகளுக்கும் மேல் பழமையானவை.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications