5 மூட்டை சில்லரையுடன் வந்த சுயேட்சை!
சென்னை:
டெபாசிட் தொகையான ரூ. 10,000 தொகையை ஒரு ரூபாய் நாணயங்களாகக் கொண்டு வந்து கொடுத்து தேர்தல் அதிகாரியைஅதிர்ச்சியடைய வைத்தார் சுயேட்சை வேட்பாளர் தேவதாஸ் என்பவர்.
தென் சென்னை தொகுதிக்கான தேர்தல் அதிகாரியான சென்னை மாநகராட்சி துணை ஆணையர் டி.பி.யாதவிடம், குப்பல்தேவதாஸ் என்பவர் வேட்பு மனு தாக்கல் செய்ய வந்தார்.
ஐந்து பெரிய சாக்கு மூட்டைகளை ஆள் வைத்து கொண்டு வந்த தேவதாஸ், அதை யாதவின் மேசை மீது வைத்தார்.
என்ன இது என்று யாதவ் கேட்டதற்கு டெபாசிட் தொகை ரூ. 10,000 சார் என்று கூறினார்.
அதிர்ச்சி அடைந்த யாதவ், இப்படியெல்லாம் கொடுக்கக் கூடாது. நோட்டுக்களாகத்தான் கொடுக்க வேண்டும். ஏராளமானவேட்பாளர்கள் காத்துக் கொண்டுள்ளனர். சில்லறைகளை எண்ணிக் கொண்டிருந்தால் அவர்களிடம் என்னால் மாலை 3மணிக்குள் மனுக்களை வாங்க முடியாது.
இருந்தாலும் உங்களது வேட்பு மனுவை வாங்கிக் கொள்கிறேன். ஆனால் இந்த சில்லறைகளுக்குப் பதிலாக ரூபாய்நோட்டுக்களாகத் தந்த பிறகே வேட்பு மனுவை ஏற்றுக் கொள்வேன் என்று கூறினார்.
இதையடுத்து சில்லறை மூட்டைகளை அங்கேயே பத்திரமாக வைத்திருக்குமாறும், ரூபாய் நோட்டுக்களுடன் வருகிறேன் என்றுகூறிய தேவதாஸ் வேகமாக வெளியேறினார். மாலை 5 மணி வாக்கில் அவர் ரூபாய் நோட்டுக்களுடன் வந்து சேர்ந்தார்.
நூறு ரூபாய் நோட்டுக்களாக ரூ. 10,000 தொகையை அதிகாரியிடம் கொடுத்தார் தேவதாஸ். அதற்கான ரசீதைப் பெற்றுக் கொண்டபின் அங்கு வைத்து விட்டுச் சென்ற சில்லறை மூடைகளை ஆள் வைத்து அள்ளிக் கொண்டு போனார் குப்பல் தேவதாஸ்.
மனுத்தாக்கலுக்கு கடைசி நாளான நேற்று, வேட்பாளர்களின் முற்றுகையால் டென்ஷனாக இருந்த தேர்தல் அலுவலர்களை சிறிதுநேரம் கலகலக்க வைத்து விட்டார் தேவதாஸ்.
-
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
மாடு பலியிட தடை.. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்! அமைச்சர் ஷாஜஹான் உறுதி -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு











Click it and Unblock the Notifications