தா.கியின் படத்தைத் திறந்து வைத்த ஜெயலலிதா!!
சிவகங்கை:
கொலை செய்யப்பட்ட முன்னாள் திமுக அமைச்சர் தா.கிருட்டிணனின் உருவப் படத்தைத் திறந்து வைத்து மலர் தூவி அஞ்சலிசெலுத்தினார்.
திமுகவின் முக்கியப் பிரமுகரான தா.கிருட்டிணன் மதுரையில் படுகொலை செய்யப்பட்டார். அழகிரியுடனான உட்கட்சிமோதலால் இந்த கொலை நடந்தது.
இந்தக் கொலைக்குப் பிறகு தா.கியின் சொந்த ஊரான சிவகங்கை அருகேயுள்ள கொம்புக்கரனேந்தல் மற்றும் அதன் சுற்று வட்டாரமக்கள் திமுகவுக்கு எதிராக திரும்பியுள்ளனர்.
முக்குலத்தோர் சமூகத்தைச் சேர்ந்தவர் தா.கி. ஏற்கனவே இச் சமூகத்தினர் திமுகவிடம் இருந்து விலகியே இருந்து வருகின்றனர்.இந் நிலையில் இந்தக் கொலையை வைத்து இம் மாவட்டத்தில் பிரச்சாரம் செய்தால் தங்களுக்கு நல்ல பலன் கிடைக்கும் எனஅதிமுக நினைக்கிறது.
இந் நிலையில் காரைக்குடிக்கு பிரச்சாரத்துக்குச் சென்ற முதல்வர் ஜெயலலிதா வழியில் முத்தனேந்தல்- கொம்புக்கரனேந்தல்சந்திப்பில் தா.கி.யின் உருவப் படத்தைத் திறந்து வைத்தார்.
படத்தைத் திறந்து வைத்து மலர்தூவி அஞ்சலி செலுத்திய ஜெயலலிதா, நிகழ்ச்சியில் பேசுகையில், தா.கிருட்டிணன் உருவப்படத்தைத் திறந்து வைப்பதில் பெருமை அடைகிறேன் என்றார்.
பின்னர் அவர் காரைக்குடி புறப்பட்டுச் சென்றார். அதன் பின்னர் காரைக்குடியில் நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தின்போதுஜெயலலிதாவின் முன்னிலையில் திமுகவில் இருந்து விலகி அதிமுகவில் சேர்ந்தார் தா.கிருட்டிணனின் தம்பியான ராமையா.
பெரியகுளத்தில் பிரச்சாரத்துக்குப் போன ஜெயலலிதா அங்குள்ள முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு, இறங்கிப்போய் கூட மாலை அணிவிக்கவில்லை. காரில் அமர்ந்து கொண்டே அவர் மாலையைத் தொட்டுத் தர அதை சிலர்தேவர் சிலைக்கு அணிவித்தனர்.
இதைப் பார்த்த அப் பகுதி முக்குலத்தோர் சமூகத்தினர் முகம் சுளித்தனர். ஆனால், தா.கி. படத்தை திறக்க காரைவிட்டு இறங்கி வந்த ஜெயலலிதா, படத்தை தானே வைத்து, மலர்களையும் தூவிவிட்டுக் கிளம்பினார்.
-
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
மாடு பலியிட தடை.. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்! அமைச்சர் ஷாஜஹான் உறுதி -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
"உண்மையை சொல்ல தைரியம் இல்லை".. ஜனநாயகன் ரிலீஸ் எப்போது? நொந்துபோய் எச் வினோத் சொன்ன பதில் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications