தினகரனிடம் இந்திய பாஸ்போர்ட்: தேர்தலில் போட்டியிட தடை இல்லை
சென்னை:
முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான சசிகலாவின் அக்காள் மகன் தினகரனிடம் இந்திய பாஸ்போர்ட்இருப்பதால் அவர் பெரியகுளம் தொகுதியில் போட்டியிட தடை இல்லை என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
பெரியகுளம் தொகுதியில் தினகரன் மீண்டும் போட்டியிடுகிறார். இந் நிலையில் தேர்தல் ஆணையத்தில் ஜனதாக் கட்சித் தலைவர்சுப்பிரமணியம் சுவாமி ஒரு புகார் கொடுத்தார்.
அதில், தினகரனுக்கு சிங்கப்பூர் குடியுரிமை உள்ளது. வெளிநாட்டில் வாழும் இந்தியர் என்று தினகரனே தன்னைப் பற்றி நீதிமன்றம்ஒன்றில் கூறியுள்ளார். எனவே, இந்தியாவில் நடைபெறும் தேர்தல்களில் அவர் போட்டியிடவோ, ஓட்டுப் போடவே தகுதி இல்லைஎன்று தனது புகாரில் சுவாமி கூறியிருந்தார்.
இந்தப் புகாரை தேர்தல் ஆணையம் ஆய்வு செய்து வந்தது. இதைத் தொடர்ந்து தேர்தல் ஆணையம், தினகரனின் பாஸ்போர்ட்உள்ளிட்ட ஆவணங்களை ஆய்வு செய்து பார்த்ததில் அவர் தேர்தலில் போட்டியிட தகுதி பெற்றவர் என்று தெரிய வருகிறது.பெரியகுளம் தொகுதியில் போட்டியிட தினகரனுக்கு தடை விதிக்க முடியாது என்று கூறியுள்ளது.
இதனையடுத்து இந்திய பாஸ்போர்ட்டை வைத்துக் கொண்டு, தன்னை சிங்கப்பூர் பிரஜை என்று சொல்லி, அன்னியசெலாவணி வழக்கில் இருந்து தினகரன் தப்ப முயன்றது குறித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குப் போடப் போவதாகசுப்பிரமணியம் சுவாமி அறிவித்துள்ளார்.
-
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது












Click it and Unblock the Notifications