கடும் விரக்தியில் ரசிகர்கள்: டேமேஜ் கண்ட்ரோலில் ரஜினி!

Subscribe to Oneindia Tamil

சென்னை:

மனம் வெறுத்துப் போன நிலையில் உள்ளனர் ரஜினி ரசிகர்கள்.

ராமதாஸை வீழ்த்தும் படலத்திற்குத் தலைமை ஏற்காமல் விருட்டென்று கிளம்பி இமயமலைக்குப் போய் விட்டதால் ரஜினி மீதுரசிகர்களிடையே அதிருப்தி அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

பாமகவை தனது எதிரியாக பகிரங்கமாக அறிவித்து விட்டு, 6 தொகுதிகளிலும் அந்தக் கட்சி தோற்க வேண்டும், அந்த 6தொகுதிகளிலும் பாஜக, அதிமுகவுடன் சேர்ந்து பிரசாரம் செய்யுங்கள், நான் பாஜகவுக்கு ஓட்டுப் போடப் போகிறேன், நீங்கள்உங்கள் விருப்பப்படி, சிந்தித்து ஓட்டுப் போடுங்கள் என்று ரஜினி மனம் திறந்து குழப்பினார்.

ரஜினியின் பேட்டி ரசிகர்களை மட்டுமல்லாது பொது மக்களையும் பெரிதாகக் குழப்பியது. ஊழலை எதிர்ப்பதாக சொல்லும் இவர்அதிமுகவுக்கு எப்படி ஓட்டு போடச் சொல்கிறார் ர் என்று புரியாததால், ரஜினியின் மனம் திறப்புக்கு மக்களிடையே வரவேற்பேஇல்லாமல் போய்விட்டது.

மேலும், ரஜினியே வலியச் சென்று ஆதரவு கொடுத்தும் கூட அதை கண்டு கொள்ளாமல் அதிமுக புறக்கணித்து விட்டது. பிரசாரக்கூட்டங்களுக்கு ரஜினி ரசிர்களை அவர்கள் அழைப்பதில்லை.

ரசிகர்களே விருப்பப்பட்டு வந்தாலும், தம்பி உங்க மன்றக் கொடியை மடக்கு, கொடியோட இங்க நிக்காதே, ஓடிப் போ என்றுஅதிமுகவினர் விரட்டியடிக்கின்றனர்.

அதிமுகவின் ஆதரவை இழந்து விடுவோமோ என்ற அச்சத்தால் பாஜகவினரும் பயந்து பயந்தே ரஜினி ரசிகர்களை பிரசாரத்தில்ஈடுபடுத்துகிறார்கள். ரஜினி மன்றக் கொடி, பேனர் இல்லாமல் சும்மா எங்க கூட வந்தா போதும் என பா.ஜ.கவினர் ரசிகர்களிடம்கூறி வருகின்றனர்.

இதனால் ரசிகர்கள் அவமானத்தால் மனம் நொந்துள்ளனனர். பலர் வெறுப்பின் உச்ச கட்டத்தில் உள்ளனர்.

இந் நிலையில் ரசிகர்களின் மனதைப் புரிந்து கொள்ளாமல், திடீரென்று கிளம்பி தனது பேவரிட் ஸ்பாட்டான இமயமலைக்குப்போய் விட்டார் பாபா.

ரஜினியின் இந்த செயல் ரசிகர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக பாமகவினரை தினந்தோறும் எதிர்கொண்டு வரும் வட மாவட்ட ரசிகர்களிடையே பெரும் விரக்தியை ஏற்படுத்தியுள்ளது.

நமது எதிரியின் பலம் நமக்குத் தெரியும், எதற்கும் துணிந்தவர்கள் பாமகவினர். அவர்களை எதிர்த்து வேலை செய்தால்,உயிருக்கு உத்தரவாதம் கிடையாது. இந் நிலையில், போராட்டத்திற்குத் தலைமை தாங்கி பிரசாரத்தில் ஈடுபட வேண்டியதலைவரே இமயமலைக்குக் கிளம்பிப் போய் விட்டால் நம்மால் எப்படி வேலை செய்ய முடியும் என்று ரசிகர்கள் கேள்வி கேட்கத்தொடங்கியுள்ளனர்.

தினமும் ரஜினியின் நிழலான சத்யநாராயண ராவை நேரில் சந்தித்தும், எஸ்.டி.டி. போட்டும் ரசிகர்கள் தங்களது வெறுப்பைஉமிழ்ந்து வருகின்றனர். பெரும்பாலான ரசிகர்களும் தேர்தல் பணிகளில் ஈடுபடாமல் முடங்கிவிட்டனர்.

பாமகவினர் கொலை வெறித் தனமாக தாக்கக் கூடும் என்பதால், தனியாகப் போய் பிரசாரம் செய்யவும் அஞ்சுகின்றனர்.அதிமுகவினருடன் சென்றால் தான் தங்களுக்கு கொஞ்சமாவது பாதுகாப்பு இருக்கும் என்று நினைக்கின்றனர்.

ஆனால், அதிமுகவினரோ ரசிகர்கள் தங்கள் கூட்டத்துக்கு வந்தாலே தங்கள் பதவி போய்விடும் என்ற பயத்தில் அவர்களைவிரட்டியடிக்கின்றனர்.

மேலும் தேர்தல் வரைதான் பாமகவினர் அமைதியாக இருப்பார்கள். தேர்தலுக்குப் பிறகு பழிவாங்கும் நடவடிக்கையில் அவர்கள்ஈடுபடக் கூடும் என்று ரசிகர்களின் குடும்பத்தினர் நினைக்கின்றனர். இதனால் ரசிகர்களான தங்களது குடும்ப உறுப்பினர்களைபிரச்சாரத்துக்குப் போக வேண்டாம் என தடுத்து வருகின்றனர்.

இன்றைய நிலவரப்படி, பாமகவின் தோல்விக்கு எந்த விதத்திலும் ஊறு விளைவிக்காத வகையில்தான் ரஜினி ரசிகர்களின் பிரசாரவேலைகள் இருக்கின்றன.

இந்தக் தகவல்களால் சூடாகிப் போயுள்ள ரஜினி அவசர டேமேஜ் கண்ட்ரோலில் இறங்கியுள்ளார். முதல் கட்டமாக தலைமைத்தேர்தல் ஆணையர் கிருஷ்ணமூர்த்தியைச் சந்தித்து ராமதாசுக்கு எதிராக மனு கொடுக்க முடிவு செய்துள்ளார். இந்தச் செய்திதமிழகம் மற்றும் நாடு முழுக்க பரபரப்பை ஏற்படுத்தும் என ரஜினி நினைக்கிறார்.

இந்த பரபரப்பு, ரசிகர்களின் குறைந்து போன மன வலிமைக்கு ஊக்கம் தரும் என்று நினைக்கிறார்.

இதற்குப் பிறகும் ரசிகர்களைத் திருப்திப்படுத்த முடியாவிட்டால் மீண்டும் ஒரு பேட்டியோ அல்லது எங்காவது ஒரு கூட்டமோபோட்டு பாமகவை விளாசுவார் ரஜினி என்கிறார்கள்.

ரஜினிக்கு கொஞ்சமாவது நிம்மதி தந்து கொண்டிருப்பது பாண்டிச்சேரி மட்டுமே. அங்கு அதிமுக பெரிய கட்சி இல்லை என்பதால்,பா.ஜ.கவினர் ரஜினி ரசிகர்களை உற்சாகமாக தங்களுடன் கைகோர்த்துக் கொண்டு செயல்பட்டு வருகின்றனர். ரசிகர்களும் பாஜகவேட்பாளர் லலிதா குமாரமங்கலத்துக்காக ஆர்வத்துடன் வேலை பார்த்து வருகின்றனர்

ரஜினி மன்றம் மூலம் வெளியாகியுள்ள பிரசார கேசட்டுகள் அங்கு ரொம்பவே பிரலமடைந்துள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+