மணமகன்-காதலி மர்மச் சாவு

Subscribe to Oneindia Tamil

வத்தலகுண்டு:

திருமணம் நடக்க இருந்த மணமகனும் அவரது காதலியும் மர்மமான முறையில் இறந்து கிடந்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே மலைகவுண்டம்பட்டியில் இச் சம்பவம் நடந்தது. இப் பகுதியைச்சேர்ந்த பூசாரியின் மகனான ராஜமோகன் (25) மற்றும் அழகேஸ்வரி (வயது 15) ஆகியோர் காதலித்து வந்தனர்.

இந் நிலையில் ராஜமோகனுக்கு வேறிடத்தில் பெண் பார்த்தனர். இதை அழகேசன் தடுத்தும் வீட்டினர் கெடுபிடியால்திருமணத்துக்கு ஒப்புக் கொணடார். மே 1ம் தேதி திருமணம் நடக்க இருந்தது.

இதையறிந்த அழகேஸ்வரி ராஜமோகனைச் சந்தித்து கதறியழுதுள்ளார். இதையடுத்து திருமணத்தில் இருந்து தப்பஅழகேஸ்வரியுடன் ராஜமோகன் இரு நாட்களுக்கு முன் ஊரைவிட்டு ஓடிவிட்டார்.

தனது மகளை ராஜமோகன் அழைத்துச் சென்றுவிட்டதாக அழகேஸ்வரியின் தந்தை காவல் நிலையத்தில் புகார்தந்தார்.

இருவரையும் போலீசார் தேடி வந்த நிலையில் சிறுமலை அடிவாரத்தில் ஒரு வீட்டில் துர்நாற்றம் வீசுவது கண்டு அப்பகுதியினர் வீட்டை உடைத்துப் பார்த்தனர்.

அப்போது ராஜமோகன் மூக்கிலும், காதுகளிலும் ரத்தம் வழிந்தபடி இறந்து கிடந்தார். அழகேஸ்வரியின் கழுத்துசேலையால் இறுக்கப்பட்டு நாக்கு வெளியே தள்ளி இறந்து கிடந்தார்.

இருவரும் சாக முடிவு செய்து, முதலில் அழகேஸ்வரியை ராஜமோன் சேலையால் நெறித்துக் கொன்றிருக்கலாம்என்று தெரிகிறது. பிறகு விஷம் குடித்து ராஜமோகன் இறந்திருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர்.

விசாரணை நடந்து வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+