பல்லவியை முற்றுகையிட்ட பெண்கள்: எஸ்.எஸ். சந்திரன் மீது கல்வீச்சு
கோவை & கும்பகோணம்:
கோயம்புத்தூரில் பா.ஜ.க. வேட்பாளர் ராதாகிருஷ்ணனுக்கு ஓட்டு கேட்டு பிரச்சாரம் செய்ய வந்த மாஜி நடிகைபல்லவியை பெண்கள் காலிக் குடத்துடன் சுற்றி வளைத்து முற்றுகையிட்டனர்.
கும்பகோணத்தில் அதிமுக வேட்பாளர் ஓ.எஸ்.மணியனுக்காக பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த நடிகர் எஸ்.எஸ்.சந்திரன் மீது கல் வீச்சுக் தாக்குதல் நடந்தது.
முன்னாள் பிரபல நடிகையும் இந் நாள் டிவி நடிகையுமான பல்லவி பா.ஜ.கவுக்கு பிரச்சாரம் செய்து வருகிறார்.தமிழ் சரியாகத் தெரியாததால் ஆங்காங்கே இந்தியில் பேசி வருகிறார் பல்லவி. தேசியக் கட்சிக்கு பிரச்சாரம்செய்கிறாராம்!.
உக்கடம் பஸ் நிலையம் அருகே பல்லவி இந்தியில் பிரச்சாரம் செய்ய, அது புரியாமல் மக்கள் முழித்தனர். எதிர்க்கட்சியினருக்கு சவால் விட்டு பல்லவி பேசியபோது, பா.ஜ.கவினர் கைகளைத் தட்டினர்.
பொது மக்களையும் பார்த்து கை தட்டுமாறு சைகை காட்டினர். ஆனால், மக்களோ ஏதும் புரியாமல் அமைதியாகநிற்க, வெறுத்துப் போன பல்லவி, ஓட் தாலியே.. தாமரைக்கு ஓட் தாலியே என்று தமிழில் இந்தியைக் கலந்துமக்களுக்கு புரிய வைக்க முயன்றார். ஆனால், மக்களிடம் நோ ரெஸ்பான்ஸ். நோ கைதட்டல்.
இதையடுத்து பேச்சை அத்துடன் முடித்துக் கொண்டு வேனை கிளப்பச் சொன்னார் பல்லவி.
அடுத்ததாக சி.எம்.சி. காலனிக்குள் நுழைந்தது வேன். அங்கு பல்லவிக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. அங்குதண்ணீருக்காக குழாயடியில் காத்திருந்த பெண்கள் வேனை நோக்கி ஓடி வர தன்னை வரவேற்கத் தான்வருகிறார்கள் என பெண்களைப் பார்த்து கையசைத்தார் பல்லவி.
ஆனால், கையில் காலிக் குடங்களுடன் வந்த பெண்கள் வேனை சுற்றி வளைத்து முற்றுகையிட்டு,
ஓட்டு கேக்குறீங்களே... தண்ணி வந்து 2 நாளாச்சு தெரியுமா... மொதல்ல எங்க எம்.பி. ராதாகிருஷ்ணன்ட சொல்லிதண்ணி விட சொல்லுங்க, அப்புறம் அவருக்கு ஓட்டு போடுறத பத்தி யோசிக்கலாம் என்று எகிற பதில் சொல்லமுடியாத பல்லவி, அங்கு பிரச்சாரம் ஏதும் செய்யாமல் வேனை அப்படியே ரிவர்சில் விடச் சொல்லிதப்பியோடினார்.
எஸ்.எஸ்.சந்திரன் மீது தாக்குதல்
இந் நிலையில் மயிலாடுதுறை அதிமுக வேட்பாளர் மணியனை ஆதரித்து கும்பகோணத்தில் திறந்த ஜீப்பில்பிரச்சாரம் செய்த நடிகரும் அதிமுக எம்.பியுமான எஸ்.எஸ். சந்திரன் மீது கல்வீச்சு நடந்தது.
உச்சிப்பிள்ளையார் கோவில் அருகே இச் சம்பவம் நடந்தது. இதையடுத்து பாதுகாப்பு வந்த போலீசாரும்,அதிமுகவினர் கல் வீசப்பட்ட திசையில் ஓடிப் போய் தேடினர். ஆனால், கல் வீசியவரைக் கண்டுபிடிக்கமுடியவில்லை.
ஆனாலும் சந்திரன் தனது பிரச்சாரத்தைத் தொடர்ந்தார்.












Click it and Unblock the Notifications