மக்களவை தேர்தல்: நாளை மூன்றாம் கட்ட வாக்கு பதிவு
டெல்லி:
மக்களவைத் தேர்தலுக்கான மூன்றாவது கட்ட வாக்குப் பதிவு நாளை (திங்கள்கிழமை) நடக்கிறது.
முதல் கட்டத் தேர்தலில் 140 தொகுதிகளுக்குத் தேர்தல் நடந்தது. இரண்டாவது கட்டத்தில் திரிபுராவில் வாக்குப்பதிவு நடந்தது.
இப்போது மூன்றாவது கட்டமாக 11 மாநிலங்களில் உள்ள 136 தொகுதிகளில் தேர்தல் நடக்கிறது. சோனியாபோட்டியிடும் ரே பரேலி, ராகுல் காந்தி போட்டியிடும் அமேதி ஆகியவையும் இதில் அடங்கும்.
மூன்றாம் கட்டத் தேர்தலில் 1,278 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இதில் 60 பேர் பெண்கள். 17.23 கோடி பேர்வாக்களிக்கத் தகுதி பெற்றவர்கள்.
உத்தரப் பிரதேசத்தில் மொத்தமுள்ள 80 மக்களவைத் தொகுதிகளில் 32லும், மகாராஷ்டிரத்தில் 28 தொகுதிகளிலும்,ஆந்திராவில் 21 தொகுதிகளிலும், பிகாரில் 17 தொகுதிகளிலும், கர்நாடகத்தில் 13 தொகுதிகளிலும், ஒரிஸ்ஸாவில்10 தொகுதிகளிலும், ஜார்க்கண்டில் 8 தொகுதிகளிலும், அஸ்ஸாமின் 7 தொகுதிகளிலும், கோவாவில் 2தொகுதிகளிலும், காஷ்மீர், மணிப்பூரில் தலா ஒரு தொகுதிகளிலும் நாளை தேர்தல் நடக்கிறது.


Click it and Unblock the Notifications
