பா.ம.க. மீது தேர்தல் ஆணையரிடம் நாளை ரஜினி நேரில் புகார்
டெல்லி:
தலைமைத் தேர்தல் ஆணையர் கிருஷ்ணமூர்த்தியை நாளை (திங்கள்கிழமை) நேரில் சந்தித்து, மதுரையில் தனது ரசிகர்கள்தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸைக் கைது செய்து நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கைவைக்கவுள்ளார் நடிகர் ரஜினிகாந்த்.
மதுரையில் ரஜினி ரசிகர்கள், பா.ம.க. நிறுவனர் ராமதாஸுக்கு கருப்புக் கொடி காட்டிப் போராட்டம் நடத்தினர். இதில் பா.ம.க.தொண்டர்கள் தாக்கியதில், ரஜினி ரசிகர்கள் காயமடைந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக ஜனநாயக முற்போக்குக் கூட்டணி சார்பிலும், ரஜினி ரசிகர்கள் சார்பிலும் மதுரை காவல்துறையிலும்,தேர்தல் ஆணையத்திலும் புகார்கள் கொடுக்கப்பட்டன.
காவல்துறையினரின் அனுமதியில்லாமல் கறுப்புக் கொடி காட்டிய ரசிகர்களைக் கைது செய்ய வேண்டும், ரசிகர்கள் மீதுநடவடிக்கை எடுக்காமல் பா.ம.கவினரை மட்டும் கைது செய்த மதுரை மாநகர காவல்துறை ஆணையர் விஜயக்குமாரை மாற்றவேண்டும் என ஜனநாயக முற்போக்குக் கூட்டணி கோரிக்கை வைத்தது.
இதை ஏற்ற தேர்தல் ஆணையம், விஜய்குமாரை இடமாற்றம் செய்து உத்தரவிட்டது. அதே போல அனுமதியில்லாமல் கறுப்புக்கொடி காட்டிய ரஜினி ரசிகர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு ஆணையம் உத்தரவிட்டது. இதனால் ரஜினிரசிகர்களும் கைதாயினர்.
அதே நேரத்தில் ரஜினி ரசிகர்களின் கோரிக்கையான ராமதாஸைக் கைது செய்யுமாறு கோரியது குறித்து தேர்தல் ஆணையம்இதுவரை முடிவு ஏதும் எடுக்கவில்லை.
இதனால் அதிருப்தி அடைந்துள்ள ரஜினிகாந்த் தலைமை தேர்தல் ஆணையர் கிருஷ்ணமூர்த்தியை நேரில் சந்தித்து புகார் கொடுக்கமுடிவு செய்துள்ளார். ரிஷிகேஷ் சென்றுள்ள அவர் தற்போது டெல்லி வந்துள்ளார்.
நாளை தலைமைத் தேர்தல் ஆணையரை நேரில் சந்தித்து ராமதாஸைக் கைது செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிடுமாறு அவர்புகார் கொடுக்கவுள்ளார். அதன் பிறகு சென்னை திரும்பி வருகிறார்.
-
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications