வசந்த்குமார், கெளரிசங்கர் மீது ஒழுங்கு நடவடிக்கை- காங். தலைமை அறிவிப்பு
டெல்லி:
திருநெல்வேலி தொகுதியில் கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளர் தனுஷ்கோடி ஆதித்தனுக்கு எதிராக வேட்பு மனுத் தாக்கல்செய்துள்ள வசந்தகுமார் மீதும், சிவகங்கை தொகுதியில் ப.சிதம்பரத்தை எதிர்த்து சுயேச்சையாக வேட்பு மனு தாக்கல் செய்துள்ளகெளரிசங்கர் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் காங்கிரஸ் கட்சித் தலைமை அறிவித்துள்ளது.
திருநெல்வேலி தொகுதியில் சீட் கேட்டு கிடைக்காத கோபத்தில் அங்கு சுயேச்சையாக வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்வசந்தகுமார். கட்சி மேலிடம் கூறியதால்தான் வேட்பு மனு தாக்கல் செய்ததாகவும் வசந்தகுமார் கூறியதால் கட்சியில் குழப்பம்ஏற்பட்டது.
இதேபோல, சிவகங்கை தொகுதி கிடைக்காத கோபத்தில் அங்கு சுயேச்சையாக வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார் காங்கிரஸ்பிரமுகரான கெளரிசங்கர்.
இதனால் காங்கிரஸ் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந் நிலையில் கட்சியின் அகில இந்திய செய்தித் தொடர்பாளர் கபில்சிபல் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
திருநெல்வேலியில் வேட்பு மனு தாக்கல் செய்யும்படி வசந்தகுமாருக்கு கட்சித் தலைமை உத்தரவு ஏதும் பிறப்பிக்கவில்லை.அவராகவே மனு தாக்கல் செய்துள்ளார். அதிகாரப்பூர்வ வேட்பாளருக்கு எதிராக வேட்பு மனு தாக்கல் செய்துள்ள வசந்த்குமார்மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
அதேபோல, சிவகங்கை தொகுதியில் மனு தாக்கல் செய்துள்ள கெளரிசங்கர் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
-
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
5,000 பேர் மட்டும் தான்.. திருச்சி கிழக்கில் விஜய் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
"உண்மையை சொல்ல தைரியம் இல்லை".. ஜனநாயகன் ரிலீஸ் எப்போது? நொந்துபோய் எச் வினோத் சொன்ன பதில் -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு












Click it and Unblock the Notifications