பிரசாரத்திற்கு காசில்லாமல் தடுமாறும் கம்யூ. வேட்பாளர்
கோவை:
கோவை தொகுதியில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் சுப்பராயன் பிரசாரத்திற்குப் போதிய பணம்இல்லாததால் தடுமாறிக் கொண்டிருக்கிறார்.
கோவை தொகுதியில் போட்டியிடும் சுப்பராயன் பெரிய அளவில் பிரசாரம் செய்யாமல் மிகவும் எளிய முறையில்பிரசாரத்தை மேற்கொண்டுள்ளார். இதற்குக் காரணம் பணப் பற்றாக்குறைதான்.
எதிர்த்துப் போட்டியிடும் பா.ஜ.க. வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் பணத்தை வாரி இறைத்துப் பிரசாரம்மேற்கொண்டுள்ளார். அவருக்கு ஆதரவாக அதிமுகவினரும் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஆனால் இவர்களுக்கு ஈடாக செலவழித்துப் பிரசாரம் செய்ய முடியாத நிலையில் கம்யூனிஸ்ட் கட்சியினர்உள்ளனர். திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் கூட்டணியில் இருந்தாலும் கூட அதிக அளவில் செலவழிக்கக்கூடாது என்ற கொள்கையில் இந்திய கம்யூனிஸ்ட் தொண்டர்கள் உறுதியாக இருப்பதால் மிகவும் எளியமுறையிலேயே பிரசாரம் மேற்கொண்டுள்ளனர்.
ஆனால், அதற்கும் கூட போதுமான பணம் அவர்களிடம் இல்லை என்பதுதான் குறிப்பிடத்தக்க விஷயம்.இதுகுறித்து சி.பி.எம், மாவட்ட செயலாளர் கண்ணன் கூறுகையில், நாங்கள் பா.ஜ.க. வேட்பாளரைப் போலஆடம்பரமாக செலவு செய்ய விரும்பவில்லை.
அதேசமயம் மக்களைக் கவரும் வகையில் எங்களது பாணியில் பிரசாரத்தில் ஈடுபடுவோம். பணம்இல்லாவிட்டாலும் கூட எங்களது உழைப்பின் மூலம் அதை ஈடுகட்டி விடுவோம் என்றார்.
பிற கட்சிகளைப் பொருத்தவரை கட்சி மேலிடத்திலிருந்து பணம் கொடுக்கப்படும். ஆனால் கம்யூனிஸ்ட்கட்சிகளைப் பொருத்தவரை தொண்டர்கள்தான் செலவழிப்பார்கள்.
பிரசாரத்திற்குத் தேவைப்படும் கார்கள் போன்றவற்றை நண்பர்கள், தெரிந்தவர்கள், கட்சி மீது அபிமானம்கொண்ட வசதி படைத்தோர் ஆகியோரிடம் வாடகைக்குக் கேட்டு வாங்கியும் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்கம்யூனிஸ்ட் கட்சித் தோழர்கள்.
வறுமையின் நிறம் சிவப்பு !
-
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை?












Click it and Unblock the Notifications