ஜெவுக்கு எதிராக புரட்சி ஏற்பட்டுள்ளது: கருணாநிதி

Subscribe to Oneindia Tamil

கரூர்:

தமிழக மக்களிடையே ஜெயலலிதா அரசுக்கு எதிராக யுகப் புரட்சி உருவாகியுள்ளதாக திமுக தலைவர் கருணாநிதிகூறினார்.

கரூரில் திமுக வேட்பாளர் கே.சி.பழனிச்சாமியை ஆதரித்து நடந்த பிரமாண்டமான பொதுக் கூட்டத்தில்கருணாநிதி பேசியதாவது:

இது கரூர் தானா? கடல் கொந்தளிப்பா? எதிரே ஒரு கடல், என்னைச் சுற்றிலும் கடல்.. வழியெல்லாம்மக்கள் கடல். திருச்சியில் புறப்பட்டு தமிழ்ப் பெருமக்கள் தள்ளித் தள்ளிவிட்டே என் வாகனம்கரூருக்கு வந்துவிட்டது.

இதற்குப் பிறகும் நம் வேட்பாளர் பழனிச்சாமிக்கு உதயசூரியனில் வாக்களிக்க வேண்டுமென்றுநான் கேட்டுத் தான் நீங்கள் வாக்களிக்கப் போவதில்லை. இப்போது வாக்களிக்கும் இயந்திரங்களைவைத்தால் திமுகவுக்கு ஓட்டு போட்டுவிட்டுப் போகும் கூட்டம் இது.

தமிழகத்தில் இன்றைக்கு ஒரு யுகப் புரட்சி ஏற்பட்டுள்ளதைக் காண்கிறேன். மக்கள் பிரளயம்கொண்டிருக்கிறார்கள். நான் மட்டுமல்ல தோழமைக் கட்சித் தலைவர்களும் இதையே தான்சொல்கிறார்கள்.

நானும் அவர்களும் செல்லும் இடங்களில் எல்லாம் ஜெயலலிதாவுக்கு எதிரான மக்களின் அலையைநேரில் காண்கிறோம்.

மூன்று ஆண்டுகளாக பொறுத்துப் பொறுத்துப் பார்த்து அடங்கியிருந்தவர்கள், ஆர்த்தெழுந்துஇருக்கிறீர்கள். தமிழகம் முழுவதும் கேட்கிறது மக்களின் ஆர்ப்பரிப்பு.

இது நாடாளுமன்றத் தேர்தல் தான். அதே நேரத்தில் ஜெயலலிதாவின் அரசுக்கு மக்கள் நோட்டீஸ்கொடுக்கும் தேர்தலாகவும் இது அமையப் போகிறது என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+