அதிகாரிகளை கெட்ட வார்த்தைகளில் திட்டிய அமைச்சர் இன்பத் தமிழன் மீது வழக்கு
சிவகாசி:
தேர்தல் விதிமுறைகளை மீறியதாகவும், அரசு அதிகாரிகளை தகாத வார்த்தைகளால் திட்டியதாகவும் தமிழகவிளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் இன்பத்தமிழன் உள்பட 24 அதிமுகவினர் மீது போலீஸார்வழக்கு பதிவு செய்துள்ளனர்.
தாமரைக்கனியின் மகனான இன்பத்தமிழனுக்கு தமிழ் கொஞ்சம் படிக்க வரும். மற்றபடி ஆங்கில எழுதப் படிக்கவராது. இதனால் இவரிடம் வேலை பார்க்கும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு தினந்தோறும் பிரச்சனைகள். துறைதொடர்பான விஷயங்களை அதிகாரிகள் ஆங்கிலம் அல்லது தமிழில் சொன்னால் கூட அது என்னவென்றேபுரியாமல் அதிகாரிகளைத் திட்டுவது இவரது ஸ்டைல்.
இந் நிலையில் இவரைத் தான் சிவகாசி தொகுதி அதிமுக வேட்பாளருக்கு இன்சார்ஜ் ஆக போட்டுள்ளார் முதல்வர்ஜெயலலிதா. இவரை எதிர்த்து மதிமுகவுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறார் இவரது தந்தையும் திமுகஎம்.எல்.ஏவுமான தாமரைக்கனி.
இதனால் சிவகாசியில் சூடு பறக்கிறது. மதிமுக-தாமைரக்கனி கூட்டணியை முறியடிக்க முடியாமல் தடுமாறும்இன்பத் தமிழனின் வாயில் இருந்து அவ்வப்போது அதிமுகவினர், ஒத்துழைக்காத அதிகாரிகளைப் பார்த்து கெட்டவார்த்தைகள் பறக்கின்றன.
இந் நிலையில் இன்று ஜெயலலிதா சிவகாசியில் பிரசாரம் செய்யவுள்ளார். இதற்காக சிவகாசி- - திருத்தங்கல்சாலையில் குறுக்குப்பாதை பஸ் நிறுத்தம் அருகே மேடை அமைக்கப்பட்டுள்ளது.
அதிமுகவினர் அச் சாலையின் இருபுறமும் கட்சிக் கொடியினைக் கட்டியிருந்தனர். விளம்பரத் தட்டிகளும்வைத்திருந்தனர். பொது இடங்களில் தேர்தல் விளம்பரத் தட்டிகள் வைப்பதும், கட்சிக் கொடிகள் கட்டிய கம்புகளைஊன்றுவதும் தேர்தல் விதிகளை மீறிய செயல் எனக் கூறி, அவற்றை அகற்ற சிவகாசி வட்டாட்சியர் பாலு சென்றார்.
அப்போது அங்கு வந்த இன்பத்தமிழன் மற்றும் அதிமுகவினர் வட்டாட்சியர் பாலுவைத் தடுத்து கெட்டவார்த்தைகளால் அர்ச்சித்தனர். டேய் எங்க ஆட்சியில, நாங்க தட்டி வைக்க முடியாதா.. என்று ஆரம்பித்த இன்பத்தமிழன் தான் ஒரு அமைச்சர் என்பதையும் மறந்து தகாத வார்த்தைகளைக் கொட்டினார்.
இதனால் அதிர்ந்து போன வட்டாட்சியர் பாலு, கண்கலங்கியவாறே திருத்தங்கல் காவல் நிலையத்தில் சென்று புகார்கொடுத்தார். முதலில் புகாரை வாங்கக் கூடாது என போலீசாருக்கு இன்பத் தமிழனிடம் இருந்து மெசேஜ் போனது.
ஆனால், இதை வைகோ பெரிதாக்கி தேர்தல் கமிஷனுக்குக் கொண்டு போய்விட்டால் அதிரடி இடமாற்றம் அல்லதுவேறு ஏதாவது தண்டனை கிடைக்கும் என்பதால் போலீசார் இன்பத் தமிழனின் கோரிக்கையைநிராகரித்துவிட்டனர்.
இன்பத்தமிழன், மாவட்ட அதிமுக இளைஞரணி துணைச் செயலாளர் கே.டி. ராஜேந்திரன், திருத்தங்கல் நகரச்செயலாளர் சரவணப்பெருமாள் உள்பட 24 அதிமுகவினர் மீது திருத்தங்கல் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.
இந்திய தண்டனைச் சட்டம் 147ன் படி சட்டத்துக்குப் புறம்பாக ஒன்று கூடுதல், தகாத வார்த்தைகளால் பொதுஇடத்தில் பேசுவது (294 (பி) பிரிவு), 186 பிரிவின் படி பணியைச் செய்ய விடாமல் அரசு அதிகாரிகளைத்தடுத்தல், தேர்தல் விதிமுறைகளை மீறியது (188 பிரிவு) ஆகிய பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அண்மையில் இன்னொரு அமைச்சர் மீதும் போலீஸார் வழக்குப் பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது. தேர்தல்ஆணையத்தின் கெடுபிடி காரணமாக போலீஸார் இப்போது பாரபட்சமின்றி செயல்படத் தொடங்கியுள்ளனர்.
-
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
Hey Everybody! ‘முதல்வன்’ அர்ஜுனான தவெக சமஉக்கள்! கேமராவைக் கண்டு அலறும் ஆபீசர்ஸ்! தவெகவுக்கு தலைவலி -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications