3ம் கட்ட தேர்தல் முடிந்தது: வன்முறைக்கு 8 பேர் பலி
டெல்லி:
மக்களவைத் தேர்தலுக்கான மூன்றாம் கட்ட வாக்குப் பதிவு இன்று நடந்து முடிந்தது. தேர்தலின்போது நடந்தவன்முறையில் 8 பேர் கொல்லப்பட்டனர்.
மொத்தம் 11 மாநிலங்களில் 136 மக்களவைத் தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடந்தது. மொத்தம் 1,278வேட்பாளர்களின் அரசியல் எதிர்காலத்தை 17.23 கோடி வாக்காளர்கள் இன்று தீர்மானித்தார்கள்.
இது தவிர, ஆந்திரம், கர்நாடகம், ஒரிசா மாநிலங்களின் சட்டசபைகளுக்கான இரண்டாவது மற்றும் இறுதிக் கட்டதேர்தலும் நடைபெற்றது. ஆந்திரத்தில் 147, கர்நாடகத்தில் 104, ஒரிசாவில் 70 தொகுதிகளில் வாக்குப்பதிவுநடந்தது.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, அவரது மகன் ராகுல், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் அமைப்பாளர்ஜார்ஜ் பெர்னாண்டஸ், மக்களவைத் தலைவர் முரளி மனோகர் ஜோஷி, ராஷ்டிரிய ஜனதா தளத் தலைவர் லல்லுபிரசாத் யாதவ்,
முன்னாள் பிரதமர்கள் சந்திரசேகர், தேவகெளடா, பகுஜன் சமாஜ்வாடி கட்சித் தலைவர் மாயாவதி, தேசியவாதகாங்கிரஸ் தலைவர் சரத் பவார், இந்தி நடிகர்கள் கோவிந்தா, சுனில் தத் ஆகியோர் இன்று நடைபெற்ற தேர்தலில்போட்டியிடும் முக்கிய வேட்பாளர்கள் ஆவார்.
இந்தத் தேர்தலையொட்டி மத்திய பாதுகாப்புப் படையினர் 1 லட்சம் பேர் பாதுகாப்புப் பணியில்ஈடுபடுத்தப்பட்டனர்.
தப்பிய ரோஜா:
ஆந்திராவில் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் ஒரு வாக்குச் சாவடிக்கு அருகே காங்கிரஸ் கட்சியினருக்கும்,தெலுங்கு தேச கட்சியினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் தெலுங்கு தேச கட்சியின் ஆதரவாளர் ஒருவர்கொல்லப்பட்டார். 3 பேர் காயமடைந்துள்ளனர்.
நகரி தொகுதியில் தெலுங்கு தேசம் கட்சியின் சார்பில் போட்டியிடும் நடிகை ராஜா, ஓட்டுப் பதிவினைபார்வையிடுவதற்காக கோப்பெடு கிராமத்திற்குள் நுழைய முயன்ற போது காங்கிரஸார் அவர் மீது தாக்குல் நடத்தமுயன்றனர். இதில் அதிர்ஷ்டவசமாக தப்பினார் நடிகை ரோஜா. இந்த கிராமம் காங்கிரஸ் வேட்பாளர் செங்க ரெட்டிஎன்பவரின் சொந்த ஊராகும்.
உத்தரப்பிரதேசம் காஸிப்பூர் தொகுதியில் ஒரு வாக்குச்சாவடிக்கு வெளியே அடையாளம் தெரியாத நபர் ஒருவர்துப்பாக்கியால் சுட்டதில் இருவர் கொல்லப்பட்டனர். 3 பேர் காயமடைந்தனர்.
மணிப்பூர் மாநிலத்தில் தேர்தல் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த மத்திய பாதுகாப்புப் படையினருக்கும்தீவிரவாதிகளுக்கும் ஏற்பட்ட துப்பாக்கி மோதலில் மத்திய பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் கொல்லப்பட்டார்.மேலும் ஒருவர் காயமடைந்தார்.
ஜார்க்கண்ட், பிகார் மாநிலங்களில் தலா 2 பேரும் தேர்தல் வன்முறையில் கொல்லப்பட்டனர்.
பிகாரில் லல்லு பிரசாத் யாதவ் போட்டியிடும் சாப்ரா தொகுதியில் இரண்டு வாக்குச் சாவடிகளில் குண்டுவெடித்தது. சாப்ரா தொகுதியில் ஒரு வாக்குச் சாவடியில் தலித்கள் வாக்களிக்கப்பதை எதிர்த்து கல்வீச்சு சம்பவம்நடைபெற்றது. அப்போது அங்கு வந்த பிகார் மாநில அமைச்சர் உதித் ராய் மீதும் கல் வீசப்பட்டது.
கர்நாடகா, ஆந்திரா, அஸ்ஸாம் ஆகிய மாநிலங்களில் 65 சதவீத வாக்குப்பதிவும், ஒரிசா, ஜார்க்கண்ட்மாநிலஙகளில் 55 சதவீத வாக்குப்பதிவும், பிகார், உத்தரப்பிரதேசம், கோவாவில் 40 முதல் 45 சதவீத வாக்குப்பதிவும், மகாராஷ்டிராவில் 40 சதவீத வாக்குப் பதிவும் நடந்துள்ளது.
மும்பையில் வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாததால், பிரபல எழுத்தாளர் ஷோபா டே, தொழிலதிபர் ஆதிகோத்ரெஜ், நடிகைகள் பூஜா பேடி, கஜோல், அவரது தாயார் தனுஜா உள்ளிட்ட ஏராளமானோர் ஏமாற்றத்துடன்திரும்பிச் சென்றனர்.
மே 5ம் தேதி நான்காம் கட்டமாக 85 தொகுதிகளுக்கும், மே 10ம் தேதி தமிழகம் உள்ளிட்ட 180 தொகுதிகளுக்கும்இறுதிக் கட்டமாகத் தேர்தல் நடைபெறவுள்ளது.
-
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
"உண்மையை சொல்ல தைரியம் இல்லை".. ஜனநாயகன் ரிலீஸ் எப்போது? நொந்துபோய் எச் வினோத் சொன்ன பதில் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்!












Click it and Unblock the Notifications