பாலகங்கா மீதான வழக்குகள் வாபஸ்; எதிர்த்து உயர் நீதீமன்றத்தில் திமுக மனு
சென்னை:
மத்திய சென்னை அதிமுக வேட்பாளர் பாலகங்கா மீது போடப்பட்டிருந்த 2 வழக்குகளை தமிழக அரசு வாபஸ்பெற்றதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக வழக்குத் தொடர்ந்துள்ளது.
கடந்த திமுக ஆட்சியில் கொடைக்கானல் ஓட்டல் வழக்கில் முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிராக தீர்ப்பு வந்தபோது,பொதுச் சொத்துக்களை சேதப்படுத்தியது உள்ளிட்டவை 2 வழக்குகள் பாலகங்கா மீது சென்னை காவல்நிலையத்தில் பதிவு செய்யப்பட்டிருந்தது. இது தொடர்பாக நீதிமன்றத்தில் விசாரணை நிலுவையில் இருந்து வந்தது.
இந் நிலையில் பாலகங்கா மீதான 2 வழக்குகளையும் தமிழக அரசு திடீரென்று வாபஸ் பெற்று விட்டது. கடந்தமாதம் ஒரு வழக்கும், இந்த மாதம் 19ம் தேதி ஒரு வழக்கும் வாபஸ் பெறப்பட்டது. பாலகங்கா தேர்தலில்போட்டியிடுவதற்கு சாதகமாகவே இந்த வழக்குகள் வாபஸ் பெறப்பட்டதாக பேச்சு எழுந்துள்ளது. இந் நிலையில்திமுக பொருளாளர் ஆற்காடு வீராசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நலன் மனுவை தாக்கல்செய்துள்ளார்.
அதில், குற்றவியல் சட்ட நடைமுறைகளுக்கு புறம்பாக இரு வழக்குகளையும் தமிழக அரசு வாபஸ் பெற்றுள்ளது.எனவே இந்த உத்தரவை செல்லாது என்று ரத்து செய்து நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று கூறியுள்ளார். இந்தவழக்கு நாளை மறுநாள் விசாரணைக்கு வருகிறது.
-
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
"உண்மையை சொல்ல தைரியம் இல்லை".. ஜனநாயகன் ரிலீஸ் எப்போது? நொந்துபோய் எச் வினோத் சொன்ன பதில் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications