எம்.பி.பி.எஸ், பி.இ படிப்பு: சுயநிதி கல்லூரிகளில் தனி நுழைவு தேர்வு
சென்னை:
சுயநிதி பொறியியல் மற்றும் மருத்துவ கல்லூரிகளில் சேர விரைவில் தனியாக நுழைவுத் தேர்வுநடத்தப்படவுள்ளது.
இது தொடர்பாக அகில இந்திய தனியார் மருத்துவ மற்றும் பொறியியல் கல்லூரிகள் சங்க தலைவர் டாக்டர் டி.டி.நாயுடு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
உச்ச நீதிமன்ற தீர்ப்புப்படி தனியார் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களை நிரப்ப விரைவில் நாடு முழுவதும்தனியாக நுழைவுத் தேர்வு நடத்தப்படும்.
மாணவர்கள் எளிதாக வந்து தேர்வு எழுதும் வகையில் இடம் தேர்வு செய்யப்பட்டு, தாவரவியல், விலங்கியல்,இயற்பியல், வேதியியல், கணிதம் ஆகிய பாடங்களுக்கு தேர்வு நடத்தப்படும். இந்த நுழைவுத் தேர்வுநேர்மையாகவும், வெளிப்படையாகவும் இருக்கும்.
இதில் தேர்வான மாணவர்கள் இந்தியா முழுவதும் எந்தக் கல்லூரியிலும் சேரலாம். தேர்வு தேதி விரைவில்அறிவிக்கப்படும்.
விண்ணப்பங்கள் இணையதளத்திலும், வங்கிகளிலும் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும். மாணவர்கள் நலன் கருதிவிண்ணப்ப கட்டணம் ரூ.100 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தேர்வு நடக்கும் இடத்திற்கு அருகில் உள்ள வங்கியில் பாதுகாப்பு பெட்டகத்தில் வினாத்தாள்வைக்கப்பட்டிருக்கும். தேர்வு தொடங்குவதற்கு 30 நிமிடத்திற்கு முன் பெட்டகம் திறக்கப்பட்டு வினாத்தாள்பாதுகாப்புடன் தேர்வு மையத்துக்குக் கொண்டு வரப்படும் என்று அவர் கூறியுள்ளார்.
-
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
விஜய் கையில் எடுக்கப்போகும் 2 மெகா திட்டங்கள்.. ஆதவ் அர்ஜுனா சர்ப்ரைஸ் அப்டேட் -
சென்னையில் வெடிக்கும் பிரியா vs விஜய் மோதல்.. மேயர் - முதல்வர் இடையே மறைமுக யுத்தம்.. என்ன காரணம்?












Click it and Unblock the Notifications