திமுக கூட்டணி-கெளரவர்கள்: அதிமுக கூட்டணி- பாண்டவர்கள்: ஜெயலலிதா
சிவகாசி:
திமுக கூட்டணியை கொள்ளைக் கூட்டணி என்று கடுமையாக விமர்சித்தார் முதல்வர் ஜெயலலிதா.
சிவகாசியில் நடந்த பொதுக்கூட்டத்தில் அதிமுக வேட்பாளர் கண்ணனுக்கு ஆதரவாக ஜெயலலிதா பேசியதாவது:-
தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றில் இப்படி ஒரு பலமான கூட்டணி, உழைக்கிற கூட்டணி, கொள்கைக் கூட்டணிஇதுவரை அமைந்தது இல்லை என்று திமுக தலைவர் கருணாநிதி சொல்லி வருகிறார்.
கருணாநிதி அடுத்தவரை ஏமாற்றுபவர் என்றுதான் இதுவரை கருதி வந்தோம். அவர் தன்னைத்தானேஏமாற்றிக்கொள்பவர் என்பது இப்போது தெரிகிறது. எண்ணிக்கையில் பலம் என்று எண்ணி, எண்ணிஇறுமாந்திருக்கிறார் கருணாநிதி.
எண்ணிக்கைதான் பலம் என்றால் 5 பாண்டவர்கள் 100 கவுரவர்களை வெற்றி கொண்ட வரலாறு இருந்திருக்காது.எப்போதும் தீமைகள் எண்ணிக்கையில் அதிகமாகத்தான் இருக்கும். ஆனால் அவற்றுக்கு தோல்வி நிச்சயம்.
நன்மைகள் எண்ணிக்கையில் குறைவாகத்தான் இருக்கும். ஆனாலும் அவற்றுக்கு வெற்றி நிச்சயம்.
கருணாநிதி கொள்கை கூட்டணி என்றும் கூறி இருக்கிறார். எந்த கொள்கையின் அடிப்படையில் அமைந்தகூட்டணி?
தமிழ்நாட்டுக்குள்ளேயே தனி நாடு கேட்கிறது பா.ம.க. அயல் நாட்டு கொலையாளிகளை ஆதரிக்கிறது மதிமுக.காங்கிரஸ் கட்சி குடும்ப அரசியலை நடத்துகிறது. திமுகவும் கோபாலபுரத்து குடும்ப அரசியலையேமுன்னிறுத்துகிறது. கம்யூனிஸ்ட்கள் இடத்துக்கு இடம் குரலை மாற்றி பேசுகிறார்கள்.
பிரிவினைவாதமும், தீவிரவாதமும், பயங்கரவாதமும், சுயநலவாதமும், சந்தர்ப்பவாதமும் கைகோர்த்திருக்கிறகூட்டணிதான் திமுக கூட்டணி.
அந்தக் கூட்டணியால் இந்தியா வேட்டை காடாக மாறிவிடக்கூடாது. சுருக்கமாக சொன்னால் அது கொள்கைகூட்டணி அல்ல. அது கொள்ளை கூட்டணி.
எனவே, மத்தியில் நல்லாட்சி அமைய அதிமுக- பா.ஜ.க. கூட்டணி வேட்பாளர்களை 40 தொகுதிகளிலும் வெற்றிபெற செய்ய வேண்டியது தமிழக மக்களின் கடமை என்று ஜெயலலிதா பேசினார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
"உண்மையை சொல்ல தைரியம் இல்லை".. ஜனநாயகன் ரிலீஸ் எப்போது? நொந்துபோய் எச் வினோத் சொன்ன பதில் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications