மதுரை, தேனி, நாமக்கல்லில் இடி மின்னலுடன் கன மழை
சென்னை:
மதுரை, தேனி, நாமக்கல், பெரியகுளம், உசிலம்பட்டி ஆகிய பகுதிகளில் இடி மின்னலுடன் கன மழைபெய்துள்ளது.
தமிழகம் முழுவதிலும் ஆங்காங்கே கோடை மழை பெய்து மக்களைக் குளிர்வித்து வருகிறது. இந் நிலையில் தென்மாவட்டங்களில் சில பகுதிகளிலும் மேற்குப் பகுதி மாவட்டங்களில் சில இடங்களிலும் நல்ல மழை பெய்துள்ளது.
மதுரையில் 101 டிகிரி அளவுக்கு வெயில் கொளுத்தியது. இந் நிலையில் நேற்று இரவு இடி மின்னலுடன் கன மழைபெய்தது. சுமார் ஒன்றரை மணி நேரம் பெய்த இந்த மழையினால் கோரிப்பாளையம், பெரியார் பேருந்துநிலையம் உள்ளிட்ட சில இடங்களில் தண்ணீர் வெள்ளம் போல தேங்கிக் கிடந்தது.
இதேபோல, உசிலம்பட்டியிலும் சுமார் அரை மணி நேரம் இடி மின்னலுடன் கன மழை பெய்தது. இதில் பலஇடங்களில் மரங்கள் கீழே விழுந்தன. தேனியில் ஒரு மணி நேரம் பெய்த மழையால் சாலைகளில் நீர்பெருக்கெடுத்து ஓடியது. பெரியகுளத்தில் கனத்த மழையுடன், சூறாவளிக் காற்றும் வீசியது.
நாமக்கல் மாவட்டம் சிக்கல் பகுதியில் கனத்த மழையால் கடைகள், வீடுகளுக்குள் நீர் புகுந்து விட்டது. இதனால்பொருட்கள் சேதமடைந்தன.
இந்த கோடை மழை இப்பகுதிகளில் இன்றும், நாளையும் தொடரலாம் என்று வானிலை ஆராய்ச்சி நிலையம்தெரிவிக்கிறது.
-
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்!












Click it and Unblock the Notifications