ரசிகர்களுக்கு பாதுகாப்பு: தேர்தல் ஆணையத்திடம் ரஜினி கோரிக்கை
டெல்லி:
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸின் தூண்டுதலின் பேரில் அவரது கட்சித் தொண்டர்கள், எனது ரசிகர்களை தாக்கிவருகின்றனர். எனவே, பா.ம.கவினரிடம் இருந்து எனது ரசிகர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றுநடிகர் ரஜினி தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை பிளஸ் புகார் மனு கொடுத்துள்ளார்.
ரிஷிகேஷில் இருந்து டெல்லி வந்த ரஜினி, தலைமை தேர்தல் ஆணையர் கிருஷ்ணமூர்த்தியை நேரில் சந்தித்துப்பேசினார். பின்னர் அவரிடம் மனுவைத் தந்தார். 5 நிமிடங்கள் மட்டுமே அங்கிருந்த ரஜினி பின்னர்செய்தியாளர்களிடம் பேசுகையில்,
தேர்தல் முடிந்த பின்னும் எனது ரசிகர்களைத் தாக்க ராமதாஸ் திட்டமிட்டு உள்ளனர். இது தொடர்பாக தேர்தல்ஆணையத்தில் புகார் கொடுக்க வந்தேன்.
தமிழக முதல்வர் ஜெயலலிதாவிடம் புகார் கொடுப்பது இன்னும் யோசிக்கவில்லை. சென்னை திரும்பிய பின்நண்பர்களுடன் பேசி விவாதித்து அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்வேன்.
இந்தத் தேர்தலில் நான் யாரையும் ஆதரிக்கவில்லை (!). எனது நிலையை ஏற்கனவே நான் தெளிவாகக் (!!!) கூறிவிட்டேன். இனி எல்லாம் மக்கள் கையில் தான் உள்ளது.
நான் அரசியலில் சேருவேனா, இல்லையா என்பது இப்போதைய பிரச்சனை அல்ல என்றார் ரஜினி.
மாலையில் சென்னை புறப்பட்ட ரஜினி, விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில்,பா.ம.க. போட்டியிடும் 6 தொகுதிகளிலும் பிரச்சாரத்துக்கு வருமாறு ரசிகர்கள் அழைக்கின்றனர். அதுகுறித்து அந்தத் தொகுதிகளின் ரசிகர்களுடன் பேசிய பின் யோசிப்பேன் என்றார்.
இந் நிலையில் ரஜினி தந்த புகார் குறித்து ஆலோசனை நடத்தி வருவதாகவும், ரஜினியின்கோரிக்கையை பரிசீலித்து வருவதாகவும் தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.
-
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications