திருநாவுக்கரசரை விரட்டிய அதிமுகவினர்: பிரச்சனையில்லை என்கிறது பா.ஜ.க.
மேட்டுப்பாளையம்:
மேட்டுப்பாளையத்தில் பா.ஜ.க. தலைவர் வெங்கைய்யா நாயுடு கலந்து கொண்ட கூட்டத்தில் மத்திய அமைச்சர் திருநாவுக்கரசரை கலந்து கொள்ள விடாமல் அதிமுகவினர் தடுத்தனர்.
நீலகிரி பா.ஜ.க. வேட்பாளர் மாஸ்டர் மாதனை ஆதரித்து அதிமுக - பா.ஜ.க. கூட்டணி சார்பில் மேட்டுப்பாளையத்தில் தேர்தல் பிரசார கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இக் கூட்டத்தில் வெங்கைய்யா நாயுடு, திருநாவுக்கரசர், நடிகை விஜயசாந்தி ஆகியோர் கலந்து கொள்ளவதாக இருந்தது.
இதற்காக விமானம் மூலம் கோவை வந்த திருநாவுக்கரசர், பின்பு காரில் மேட்டுப்பாளையம் வந்தார். கூட்ட மேடைக்கு அருகே ஒரு லாட்ஜில் அறை எடுத்துத் தங்கினார். இந் நிலையில், இன்னும் சிறிது நேரத்தில் திருநாவுக்கரசர் கூட்டத்துக்கு வருவார் என்று பா.ஜ.கவினர் மைக்கில் அறிவிப்பு செய்தனர்.
இதைக் கேட்ட அதிமுகவினர், மேட்டுப்பாளையம் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. செல்வராஜ் தலைமையில் எதிர்ப்பு தெரிவித்தனர். திருநாவுக்கரசர் கலந்து கொண்டால், நாங்கள் யாரும் கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம் என்று கூறியவாறு கலைந்து போகத் தொடங்கினர்.
வெங்கைய்யா நாயுடு வரும் நேரத்தில் கூட்டம் இல்லையென்றால் என்ன செய்வது என்று கவலைப்பட்ட மாஸ்டர் மாதன், திருநாவுக்கரசர் தங்கியிருந்த லாட்ஜுக்கு சென்று, நிலவரம் சரியில்லை, கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டாம் என்று அவரிடம் கேட்டுக் கொண்டார்.
அதன் பின்னர் திருநாவுக்கரசர் இல்லாமல், வெங்கைய்யா நாயுடு மற்றும் விஜயசாந்தி அக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினர்.
பிரச்சனையில்லை: பா.ஜ.க
இச் சம்பவம் குறித்து தமிழக பா.ஜ.க. பொதுச் செயலாளர் குமாரவேலுவிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, இதை ஒரு பெரிய விஷயமாக நாங்கள் எடுத்துக் கொள்ளவில்லை என்றார்.
-
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
மாடு பலியிட தடை.. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்! அமைச்சர் ஷாஜஹான் உறுதி -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
"உண்மையை சொல்ல தைரியம் இல்லை".. ஜனநாயகன் ரிலீஸ் எப்போது? நொந்துபோய் எச் வினோத் சொன்ன பதில் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு












Click it and Unblock the Notifications