சென்னை ரெயில் நிலையங்களில் புகை பிடித்த 1,500 பேருக்கு ரூ.200 அபராதம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை ரயில் நிலையங்களில் தடையை மீறி புகைப்பிடித்த 1,500 பேரிடம் தலா ரூ.200 அபராதம்வசூலிக்கப்பட்டது.
ரயில் மற்றும் ரயில் நிலையங்களில் பீடி, சிகரெட் விற்க தடை உள்ளது. கடந்த சனிக்கிழமை முதல் ரயில்,நிலையங்களில் புகை பிடிக்க தடை விதிக்கப்பட்டது. மீறி புகை பிடித்தால் ரூ. 200 அபராதம் விதிக்கப்படும் என்றுஅறிவிக்கப்பட்டது.
இதையடுத்து சென்னை சென்டிரல், எழும்பூர் உள்பட சென்னையில் உள்ள ரயில் நிலையங்களில் போலீசார் தீவிரகண்காணிப்பில் ஈடுபட்டனர். இந்தக் கண்காணிப்பில் தடையை மீறி புகை பிடித்ததாக 1,500 பேர் மீதுவழக்குப்பதிவு செய்யப் பட்டு, தலா ரூ.200 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
ரயில் நிலையங்களில் உள்ள ஒலிபெருக்கிகளில், புகை பிடிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றுஅறிவிக்கப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications