காவல் நிலையம் இடிந்து விழுந்தது: 2 காவலர்கள் காயம்
சென்னை:
சென்னை மாதவரம் பகுதி காவல் நிலையத்தின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 2 காவலர்கள் காயமடைந்தனர். மேசை,நாற்காலிகள் உடைந்தன, ஒரு மோட்டார் சைக்கிள் நசுங்கியது.
மாதவரத்தில் உள்ள இந்தக் காவல் நிலையக் கட்டடம் 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது.
கடந்த 1995ம் ஆண்டு இந்தக் கட்டடத்தைப் பார்வையிட்ட தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி வாரிய அதிகாரிகள், இந்தக் கட்டடம்பயன்படுத்துவதற்கு ஏற்றதல்ல, எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் என்று அரசிடம் அறிக்கை தந்தனர்.
இருப்பினும் இதே கட்டடத்தில்தான் மாதவரம் காவல் நிலையம் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. இந் நிலையில், கடந்த சிலநாட்களாக பெய்து வரும் கன மழை காரணமாக கட்டடத்தின் மேற்கூரை சேதமடைந்து இடிந்து விழுந்தது.
நல்ல வேளையாக காவல் நிலையத்தில் அப்போது 2 காவலர்கள் மட்டுமே இருந்தனர். அவர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டது.இதுதவிர, காவல் நிலையத்தில் இருந்த மேசைகள், நாற்காலிகள், ஒரு மோட்டார் சைக்கிள் ஆகியவை உடைந்தன.
தற்போதும் கூட காவல் நிலையம் தாற்காலிகமாகக் கூட வேறிடத்துக்கு மாற்றப்படாமல், இடிபாடுகளுக்கு இடையேதான்காவலர்கள் பணியாற்றி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications