இன்று வாஜ்பாய்-ரஜினி சந்திப்பு
சென்னை:
தேர்தல் பிரச்சாரத்துக்காக இன்று சென்னை வரும் பிரதமர் வாஜ்பாயை நடிகர் ரஜினி விமானநிலையத்தில் சந்தித்துப் பேசுகிறார். இதற்கிடையே பா.ம.க. போட்டியிடும் தொகுதிகளில்வினியோகிப்பதற்காக ரசிகர்கள் மூலம் ரஜினி அனுப்பிய கேசட்டுகளை பறிமுதல் செய்ய தேர்தல்கமிஷன் உத்தரவிட்டுள்ளது.
இன்று காலையில் தான் போட்டியிடும் உத்தரப் பிரதேச மாநிலம் லக்னெள தொகுதியில் வாக்களித்தபிரதமர் வாஜ்பாய் சிறப்பு விமானம் மூலம் பகல் 2 மணிக்கு கோவை வந்தார். அங்குள்ளகாவல்துறை அதிகாரிகள் ஓய்வில்லத்தில் ஓய்வெடுத்த பிரதமர் ஹெலிகாப்டரில் திருப்பூர் சென்றுபொதுக் கூட்டத்தில் பேசுகிறார்.
பின்னர் மீண்டும் கோவை வழியாக மாலையில் சென்னை வரும் வாஜ்பாய், தீவுத் திடலில் முதல்வர்ஜெயலலிதாவுடன் கூட்டாக பொதுக் கூட்டத்தில் பேசுகிறார்.
இந் நிலையில் பிரதமர் வாஜ்பாயை சென்னை விமான நிலையத்திலோ அல்லது கவர்னர்மாளிகையிலோ வைத்து சந்திக்க ரஜினி தரப்பில் அனுமதி கேட்கப்பட்டது.
கவர்னர் மாளிகையில் வைத்து சந்தித்தால், நடிகர் ரஜினிக்கு பா.ஜ.க. அதிக மரியாதை கொடுத்ததுபோல் ஆகி, ஜெயலலிதாவுக்கு மூட்-அவுட் ஆகலாம் என்பதால் விமான நிலையத்திலேயே இந்தச்சந்திப்புக்கு அனுமதி தரப்பட்டது.
இச் சந்திப்பின்போது நடிகர் ரஜினி, பாஜகவுக்கு தனது ஆதரவை முறைப்படி தெரிவிப்பாராம். (சென்னையில்தனது திருமண மண்டபத்தில் வைத்து மனம் திறந்த ரஜினி, பா.ஜ.கவுக்கு ஆதரவு என்றார். பின்னர் டெல்லி சென்றுதர்தல் கமிஷனிடம் புகார் தந்துவிட்டுத் திரும்பும்போது யாருக்கும் ஆதரவு தரவில்லை என்றதுநினைவுகூறத்தக்கது. இப்போது வாஜ்பாயை சந்தித்து மீண்டும் பா.ஜ.கவுக்கு ஆதரவு தெரிவிக்கவுள்ளார்).
பா.ம.கவுக்கு எதிராக ரஜினி விடுத்த அறிக்கை மக்களை சரியாகச் சென்றடையவில்லை. இதனால்வாஜ்பாயை சந்தித்தால் முதல் பக்கச் செய்தியாகி, தமிழகத்தில் பரபரப்பு ஏற்படும் என்பதால் இந்தச்சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டதாகத் தெரிகிறது.
கேசட்டுகள் பறிமுதல்:
இதற்கிடையே பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸை விமர்சித்து ரஜினி பேசிய பேச்சைத் தொகுத்துஉருவாக்கப்பட்ட கேசட்டுகள் அக் கட்சி போட்டியிடும் 6 தொகுதிகளிலும் வினியோகிக்கஅனுப்பப்பட்டுள்ளன.
தொகுதிக்கு 30,000 வீதம் சுமார் 1.8 லட்சம் கேசட்டுகளை அந்தந்தத் தொகுதி ரசிகர் மன்றநிர்வாகிகளிடம் சத்யநாராயண ராவ் வழங்கினார்.
இந்த கேசட்டுகளால் வன்முறை வெடிக்கலாம் என பா.ம.க. தலைவர் ஜி.கே. மணி தேர்தல்ஆணையத்திடம் புகார் கொடுத்தார். மேலும் இந்தக் கேசட்டுகளுக்காக ரஜினி ரூ. 60 லட்சம்செலவிட்டுள்ளார்.
அதை 6 தொகுதிகளிலும் போட்டியிடும் அதிமுக-பாஜக வேட்பாளர்களின் தேர்தல் செலவுக்கணக்கில் சேர்க்க வேண்டும் என்றும் கோரியுள்ளார். தொகுதிக்கு ரூ. 25 லட்சத்துக்கு மேல் செலவுசெய்யக் கூடாது என்ற தடை இருப்பதால் இந்த கேசட் செலவு சேர்க்கப்பட்டால் 6 தொகுதிகளின்அதிமுக-பாஜக வேட்பாளர்களும் சிக்கலில் மாட்டுவர்.
இதையடுத்து உஷாரான ரஜினி தரப்பு, கேசட்டுகளை பொது மக்களுக்குத் தருவதற்காகக்கொடுக்கவில்லை, ரசிகர்கள் தங்களது உறவினர்களுக்குத் தரவே கொடுக்கப்பட்டது என்று விளக்கம்தருவதோடு, இதை ஒலிப் பெருக்கிகளில் போட்டு ஒலிபரப்பிவிட வேண்டாம் என ரசிகர்களுக்குஅவசர உத்தரவையும் பிறப்பித்துள்ளது.
இந் நிலையில் பா.ம.கவின் புகாரில் சாரம் இருப்பதை உணர்ந்த தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரிமிருத்யுஞ்சய் சாரங்கி, கேசட்டுகளை பறிமுதல் செய்யுமாறு 6 தொகுதிகள் அடங்கிய மாவட்டக்கலெக்டர்களுக்கும் உத்தரவிட்டுள்ளார்.
பஸ்களில் ரஜினி கேசட்:
இதற்கிடையே ரஜினியின் இந்த கேசட்டுகளை ரசிகர்கள் தனியார் மற்றும் அரசு பஸ் டிரைவர்கள்,கண்ட்ரக்டர்களிடம் கொடுத்து அதை பஸ்களில் ஒலிபரப்புமாறு கோரி வருகின்றனர்.
ஆனால், அதிமுக மீது கடுப்பில் இருக்கும் அரசு பஸ் ஓட்டுனர்கள், நடத்துனர்கள் கேசட்டுகளைவாங்காமல் ரசிகர்களை திருப்பி அனுப்பிவிட்டனர்.
அதே நேரத்தில் சில தனியார் பஸ் டிரைவர்கள் இதை வாங்கி பஸ்களில் ஒலிபரப்பி வருகின்றனர்.இதை தனியார் பஸ் நிறுவனத்தினர் தவிர்க்காவிட்டால் கடும் விளைவுகள் ஏற்படும் எனபா.ம.கவினர் எச்சரித்துள்ளனர்.
ரஜினி வீடியோக்கள் பறிமுதல்:
இந் நிலையில் ரஜினி மனம் திறந்த பேட்டியின் வீடியோ கேசட்டுகளை சேலம் மாவட்ட ரசிகர்கள்அரசு பஸ்களில் தந்து ஒளிபரப்பச் செய்து வருகின்றனர். இதனால் அதிமுகவுக்கு ஓட்டு கிடைக்கும்என்பதால் இந்த வீடியோவைக் காட்டுமாறு ஓட்டுனர்களை அதிகாரிகள் வற்புறுத்தி வருகின்றனர்.
தேர்தல் ஆணையத்துக்கு இது குறித்து புகார் போனால் பதவி போய்விடும் என்பதால், ஆர்.டி.ஓ.கண்ணுசாமி விரைந்து சென்று பஸ்களை வழியில் நிறுத்தி ரஜினியின் வீடியோ கேசட்டுகளைபறிமுதல் செய்தார்.
இன்று 6 அரசு பஸ்களில் இருந்து கேசட்டுகள் பிடிபட்டன.
-
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
புதிய டிஜிபி-யுடன் விஜய் தலைமைச் செயலக சேம்பரில் 'ஒரு மணிநேர' க்ளோஸ் டோர் மீட்டிங்.. 3 முக்கிய அசைன்மென்ட்! -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
உங்க வயசு என் அனுபவம்.. சீனியருக்கு மரியாதையில்லை! ஆனந்த் - ஆதவ் - அருணுக்கு அடுத்து செங்கோட்டையன்! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
கேள்வியே கேட்க கூடாதா.. 6 மாசத்துல என்ன நடக்குதுனு பாருங்க.. விஜயை சாடிய அனிதா ராதாகிருஷ்ணன் -
மகள் கல்யாணத்திற்காக முதல்வர் விஜய்யை சந்தித்த குஷ்பு குடும்பம்.. வெளியே வந்ததும் உருக்கமான பதிவு -
13 மாவட்டங்களில் பெண் கலெக்டர்கள்.. விஜய்யின் சிங்கப்பெண் ரூட்.. மாவட்டம்தோறும் அதிரடி -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்!











Click it and Unblock the Notifications