தேர்தல் கமிஷன் மீது பழி போடும் ஜெயலலிதா
சென்னை:
வாக்காளர் பட்டியலில் ஏராளமானோரின் பெயர்கள் விடுபட்டதற்கு தேர்தல் ஆணையமே பொறுப்பு என்றுமுதல்வர் ஜெயலலிதா குற்றம் சாட்டினார்.
சென்னை போயஸ் கார்டன் பகுதிக்கு உட்பட்ட ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் தோழி சசிகலா சகிதமாக வந்துவரிசையில் நின்று வாக்களித்தார் ஜெயலலிதா. அவர் வரிசையில் நின்றபோது, சில பெண்கள் அவரை அணுகி,வாக்காளர் அடையாள அட்டை இருந்து தங்களது பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லை என்று புகார்தெரிவித்தனர்.
வாக்களித்த பின்னர் வெளியே வந்த ஜெயலலிதா செய்தியாளர்களிடம் பேசுகையில், சென்னையில் பலபகுதிகளில் தகுதியுடைய பல வாக்காளர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இடம் பெறவில்லை. இதனால்அவர்களால் வாக்களிக்க முடியவில்லை.
போயஸ் கார்டன் பகுதியில் நான் 1972ம் ஆண்டு முதல் வசித்து வருகிறேன். இதே பகுதியில் 1968ம் ஆண்டு முதல்திருமதி ராம் என்ற பெண்மணி வசித்து வருகிறார். அவரை எனக்கு நன்கு தெரியும். ஆனால் அவரது பெயர்வாக்காளர் பட்டியலில் இல்லை. இதனால் அவர் வாக்களிக்க முடியாமல் போய்விட்டது.
இது போன்று நிறைய புகார்கள் வந்துள்ளன. இது குறித்து தேர்தல் ஆணையம்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இது எனது அதிகார எல்லைக்கு உட்பட்டத்தல்ல. மாநில தலைமைத் தேர்தல அதிகாரி சாரங்கி உடனடி நடவடிக்கைஎடுக்க வேண்டும்.
வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணி தேர்தல் ஆணையத்தைச் சேர்ந்தது. அதில் நேரும் குளறுபடிகளுக்கு தேர்தல்ஆணையமே பொறுப்பு என்றார்.
செய்தியாளர்கள் அவரிடம் தேர்தல் முடிவு குறித்துக் கேட்டபோது, அது குறித்து கருத்து கூற விரும்பவில்லை.கருத்துக் கணிப்பு முடிவுகள் குறித்தும் இப்போது எதுவும் கூற விரும்பவில்லை. தேர்தல் முடிவுகள் வெளியான பின்எனது கருத்தைக் கூறுகிறேன்.
வேட்பாளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட அரசு ஊழியர்களும் மற்றவர்களும், அதற்கு தமிழக அரசு தான்காரணம் என்று குற்றம் சாட்டும் நிலையில், இந்தப் பழியை தேர்தல் கமிஷன் மீது திருப்பி விட்டுள்ளார் முதல்வர்.
தேர்தல் ஆணையம் மீது பா.ஜ.கவும் புகார்
ஜெயலலிதாவுக்கு ஆதரவாக தேர்தல் கமிஷனையே குறை கூறியுள்ளது.
இது குறித்து பா.ஜ.க. அகில இந்திய பாஜக செயலாளர் இல.கணேசன் விடுத்துள்ள அறிக்கையில், தமிழகத்தில்வாக்குப் பதிவு மிக அமைதியாக நடந்து வருகிறது. தேர்தல் ஆணையத்தை இதற்காக பாராட்ட வேண்டும்.
இருப்பினும், தகுதி உடைய பல வாக்காளர்களின் பெயர்கள் பட்டியலில் இடம் பெறவில்லை. ஆணையத்தின்குளறுபடிகளே இதற்குக் காரணம். இதன் மூலம் ஆணையம் தனது அடிப்படை கடமையிலிருந்து தவறி விட்டது.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு மக்கள் ஆதரவு தெவித்து வாக்களித்து வருகிறார்கள்.நிச்சயம் வாஜ்பாய் தலைமையில் மீண்டும் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமையும் என்று கூறியுள்ளார்அவர்.
முன்னதாக கணேசன் தி.நகரில் உள்ள வாக்குச் சாவடியில் வாக்களித்தார்.
-
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
எடப்பாடியை பார்க்க விஜய் டைம் கேட்கவில்லை.. ஆதவ் ஒரு சந்தர்ப்பவாதி! போட்டுத் தாக்கிய கேபி முனுசாமி! -
கையை மீறி போகும் டாஸ்மாக் விவகாரம்.. நேரடியாக இறங்கிய விஜய்.. ஒரே நேரத்தில் 2 பிரச்சனைகளுக்குத் தீர்வு! -
உடனே வாங்க.. அதிகாரிகளை மீட்டிங் ரூமிற்கு அழைத்த விஜய்.. துளைச்சு எடுத்துட்டாரே.. வாத்தி ரெய்டு! -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
கேள்வியே கேட்க கூடாதா.. 6 மாசத்துல என்ன நடக்குதுனு பாருங்க.. விஜயை சாடிய அனிதா ராதாகிருஷ்ணன் -
முடிவுக்கு வந்த 9 மாத காத்திருப்பு.. தமிழக புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் இன்று பொறுப்பேற்பு! -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான்












Click it and Unblock the Notifications