போலீசாருக்கு சங்கம்: உயர் நீதிமன்றத்தில் மனு தள்ளுபடி
சென்னை:
தமிழகத்தில் போலீஸ் சங்கம் அமைக்க அனுமதி வழங்கக் கோரி தாக்கல் செய்த மனுக்களை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
ஆந்திரா, கேரளா போன்ற மாநிலங்களில் போலீஸ் சங்கம் அமைக்க அனுமதி தரப்பபட்டுள்ளது என்றும், ஆனால்தமிழக அரசு அனுமதி தர மறுக்கிறது என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த முதல் டிவிஷன் பெஞ்ச், இது குறித்து போலீஸ் டைரக்டர் ஜெனரல் பரிசீலித்து முடிவுஎடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. ஆனால், போலீஸ் சங்கம் தமிழகத்தில் தேவையில்லை என்று கூறி கடந்த-2002 வருடம் ஜூலை 7ம் தேதியன்று போலீஸ் டைரக்டர் ஜெனரல் அந்த கோரிக்கை மனுக்களை தள்ளுபடிசெய்தார்.
இதை எதிர்த்து, தமிழ்நாடு போலீஸ் கான்ஸ்டபிள் சங்க மாநிலத் தலைவர் சிவகுமார் மற்றும் முன்னாள்போலீஸ்காரர் பன்னீர்செல்வம், ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியம் சுவாமி ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர்.
இதை விசாரித்த தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டி, நீதிபதி சக்கரியா உசேன் ஆகியோர் மனுக்களைத் தள்ளுபடிசெய்து உத்தரவிட்டனர். தீர்ப்பில் கூறியுள்ஹதாவது:
பன்னீர் செல்வம், சுப்பிரமணியம் சுவாமி ஆகியோர் போலீஸ் பணியில் இல்லாததால் அவர்களது மனுக்களைத்தள்ளுபடி செய்கிறோம். மேலும் இந்திய அரசியல் சட்டம் 19(1)(சி) பிரிவு ராணுவம், போலீஸ் ஆகிய முக்கியபணியில் இருப்பவர்களைத் தவிர, மற்ற ஊழியர்கள் மட்டுமே சங்கம் அமைக்க வழிவகை செய்கிறது.
ஆந்திரா, கேரளாவில் போலீசாருக்கு சங்கம் இருப்பதற்கு அந்தந்த மாநில போலீஸ் டைரக்டர் ஜெனரலின்அணுகுமுறை வெவ்வேறாக இருப்பதே காரணமாகும். மேலும் தமிழக போலீஸ் டைரக்டர் ஜெனரல் எடுத்த முடிவைசட்ட விரோதம் என்று கூற முடியாது. எனவே சிவகுமாரின் மனுவையும் தள்ளுபடி செய்கிறோம் என்று கூறினர்.
-
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
விஜய் அரசில் புதிய சகாப்தம்.. ஒரு ரூபாய் லஞ்சம் இன்றி 171 வணிகவரி அதிகாரிகளுக்கு பதவி உயர்வு! -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
உங்க வயசு என் அனுபவம்.. சீனியருக்கு மரியாதையில்லை! ஆனந்த் - ஆதவ் - அருணுக்கு அடுத்து செங்கோட்டையன்! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
அன்னதானம் எங்க போடறீங்க.. வாட்டர் ஸ்பாட் எங்க.. அதிகாரிகளை கேள்விகளால் துளைத்த ரமேஷ் -
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ












Click it and Unblock the Notifications