மா. செயலாளர்களுடன் வைகோ நாளை ஆலோசனை
சென்னை:
தேர்தல் முடிவுகள் குறித்தும், அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்தும் மதிமுக மாவட்டச்செயலாளர்களுடன் நாளை ஆலோசனை நடத்தவுள்ளதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்..
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கட்சியின் தலைமை அலுவலகமான தாயகத்தில் வருகிற14ம் தேதி மதிமுக ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. இதில் மாவட்டச் செயலாளர்கள் அனைவரும் கலந்துகொள்கிறார்கள்.
கட்சியின் உயர் நிலைக் கூட்டம் அன்றைய தினம் காலை 11 மணிக்கும், மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் 3மணிக்கும் நடைபெறும் என்று வைகோ அறிவித்துள்ளார்.
அமெரிக்கா செல்ல மனு:
தனது பேத்தியை மகளிடம் கொண்டு சேர்ப்பதற்காக அமெரிக்காவின் சிகாகோ நகருக்குச் செல்ல அனுமதி கோரிசென்னை உயர்நீதிமன்றத்தில் வைகோ மனு தொடர்ந்துள்ளார்.
பொடா சட்டத்தில் கைதான வைகோ தற்போது ஜாமீனில் விடுதலையாகி உள்ளார். தேர்தல் பிரசாரத்தில்கலந்துகொள்ள அவருக்கு அனுமதி கொடுக்கப்பட்டது. அதற்குப் பிறகு சென்னையில் தங்கி இருக்க வேண்டும்என்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அமெரிக்கா செல்ல அனுமதி கோரி வைகோ உயர்நீதிமன்றத்தில் மனு செய்துள்ளார். அந்தமனுவில், எனது மகளும், மருமகனும் அமெரிக்காவின் சிகாகோ நகரில் வசித்து வருகிறார்கள். அவர்களுக்கு 11மாதங்களுக்கு முன்பு இரட்டைக் குழந்தைகள் பிறந்தனர்.
இதில் ஒரு குழந்தை அமெரிக்காவில் பெற்றோருடன் உள்ளது. மற்றொரு குழந்தை எங்களது வீட்டில் எனதுமனைவியின் பராமரிப்பில் உள்ளது. அந்தக் குழந்தை தற்போது விமான பயணம் மேற்கொள்வதற்கேற்ப வளர்ச்சிஅடைந்துள்ளது. அதை தாயிடம் ஒப்படைக்க முடிவு செய்துள்ளோம்.
எனவே நான் அமெரிக்கா செல்ல நீதிமன்றம் அனுமதிக்க வேண்டும். ஜூன் 3ம் தேதி முதல் 20ம் தேதி வரைசிகாகோ செல்ல முடிவு செய்துள்ளேன். எனவே எனது பாஸ்போர்ட்டை என்னிடம் ஒப்படைக்க உத்தரவிடவேண்டும் என்று வைகோ கூறியுள்ளார்.
இந்த மனுவை பரிசீலித்த நீதிபதிகள் கண்ணதாசன், பாலசுப்ரமணியம் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் வருகிற 18ம்தேதிக்கு விசாரணையை தள்ளி வைத்தது.
-
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications