காதலனை கொன்றதாக தந்தை மீது மகள் பரபரப்பு புகார்
சென்னை:
காதலித்துத் திருமணம் செய்து தனது கணவரை, தனது தந்தை கடத்திச் சென்று விட்டதாகக் கூறி சென்னை காவல்துறை ஆணையர்அலுவலகத்தில் மதுரையைச் சேர்ந்த மருத்துவக் கல்லூரி மாணவி பரபரப்புப் புகார் அளித்துள்ளார்.
மதுரை சர்வேயர் காலனி பகுதியைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். வழக்கறிஞரான இவரது மகள் ரோஸ்லின் செல்வி அரசி மேரி.இவர் நேபாளத்தில் மருத்துவக் கல்லூரியில் படித்து வருகிறார்.
மதுரையில் இருந்தபோது பிரதாப் என்பவருக்கும், மேரிக்கும் காதல் மலர்ந்தது. இதை எதிர்த்த ராதாகிருஷ்ணன், பிரதாப்வீட்டிற்கு சென்று மிரட்டியதாகத் தெரிகிறது. இதையடுத்து மேரியும், பிரதாப்பும் வீட்டை விட்டு வெளியேறி சென்னை வந்தனர்.
சென்னை பெசன்ட் நகர் மாதா கோவிலில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் கோவை சென்று அங்குள்ளநீதிமன்றத்தில் தங்களது திருமணத்தைப் பதிவு செய்தனர்.
அதன் பிறகு என்ன செய்வது என்று யோசித்தனர். பிரதாப் மதுரை சென்றால் தந்தையால் ஆபத்து ஏற்படும் என்பதை அறிந்தமேரி, அவரை தன்னுடன் நேபாளத்திற்கு அழைத்துச் சென்றார். அங்கு பிரதாப் ஒரு வேலையில் சேர்ந்தார்.
இந் நிலையில் நேபாளம் சென்ற ராதாகிருஷ்ணன், தனது கோபம் தணிந்து விட்டாதகவும், படிப்பை முடித்து விட்டு மதுரைவருமாறும், பிரதாப்புக்கு மதுரையில் வேலை வாங்கித் தருவதாகவும் கூறியுள்ளார். அதை நம்பிய மேரி, தந்தையுடன் பிரதாப்பைஅனுப்பி வைத்துள்ளார்.
மதுரைக்கு பிரதாப்பை அழைத்து வந்த ராதாகிருஷ்ணன் அவருக்கு வேலை ஏதும் வாங்கித் தரவில்லை. மாறாக மிரட்டியுள்ளார்.இதனால் அதிர்ந்து போன பிரதாப் மதுரையிலிருந்து சென்னைக்கு வந்தார். சேலையூரில் ஒரு வேலையில் சேர்ந்தார்.
இந் நிலையில் சில வாரங்களுக்கு முன் சேலையூர் வந்த ராதாகிருஷ்ணன் பிரதாப்பை எங்கோ அழைத்துச் சென்றதாககூறப்படுகிறது. அதன் பிறகு பிரதாப்பைக் காணவில்லை.
தனது சென்னை தோழிகள் மூலம் இதை அறிந்த மேரி சென்னை விரைந்து வந்தார். சேலையூர் காவல் நிலையத்தில் புகார்கொடுத்தார், செங்கை கிழக்கு மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர் சங்கரிடமும் நேரடியாகப் புகார் கொடுத்தார்.
இருப்பினும் ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆள் கொணர்வு (ஹேபியஸ்கார்பஸ்) மனுவைத் தாக்கல் செய்தார். பிரதாப்பை தேடிக் கண்டுபிடித்து ஆஜர் செய்யுமாறு நீதிமன்றம் காவல்துறைக்குஉத்தரவிட்டது.
இந் நிலையில் மேரியைச் சந்தித்த தந்தை ராதாகிருஷ்ணன், வீணாக போலீஸ் வழக்கு என்று போக வேண்டாம் என்றுஎச்சரித்துள்ளார்.
இதைத் தொடர்ந்து சென்னை மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்துக்குச் சென்ற மேரி அங்கு, தனது தந்தையால் தனதுஉயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாகவும், தனது காதலனையும் அவர்தான் கடத்திச் சென்று கொன்றிருக்க வேண்டும் என்றும் கூறிபுகார் கொடுத்துள்ளார்.
-
13 மாவட்டங்களில் பெண் கலெக்டர்கள்.. விஜய்யின் சிங்கப்பெண் ரூட்.. மாவட்டம்தோறும் அதிரடி -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
அண்ணாமலைக்கு, விஜய் கொடுத்த நம்பிக்கை! பாஜகவிற்கு ‘குட்பை' கூறி புது கட்சி தொடங்குவது ஏன்? பின்னணி -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications