மதமாற்ற தடை சட்டம் ரத்து- அரசு ஊழியர் தண்டனை ரத்து- கருணாநிதி மீதான வழக்கு வாபஸ்- ஜெ. அந்தர் பல்டி
சென்னை:
மதமாற்றத் தடை சட்டம், திமுக தலைவர் கருணாநிதிக்கு எதிரான வழக்குகள், அரசு ஊழியர்களுக்குவழங்கப்பட்ட தண்டனைகள், ரேசன் கார்டுகளில் குத்தப்பட்ட எச் முத்திரை ஆகிய அனைத்தும்உடனடியாக வாபஸ் பெறப்படுவதாக முதல்வர் ஜெயலலிதா இன்று அறிவித்தார்.
விவசாயிகளுக்கு ரத்து செய்யப்பட்ட இலவச மின்சாரமும், பள்ளி மாணவ- மாணவிகளுக்கு ரத்துசெய்யப்பட்ட இலவச பஸ் பாஸ்களும் மீண்டும் உடனடியாக வழங்கப்படும் என்றும் ஜெயலலிதாஅறிவித்துள்ளார்.
அத்தோடு கல்லூரி மாணவர்களுக்கும் பஸ் கட்டணத்தில் புதிதாக சலுகையும் அளிக்கப்படும்.
பள்ளிகளில் குழந்தைகளுக்கான சத்துணவில் வாரம் ஒரு நாள் மீண்டும் முட்டை வழங்கப்படும்.
மக்களவைத் தேர்தலில் அதிமுகவுக்கு கிடைத்த பெரும் அடியைத் தொடர்ந்து இந்த முடிவுகளை ஜெயலலிதாஎடுத்துள்ளார்.
மக்களின் உணர்வுகளை மதித்து இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், தனது அரசு எப்போதுமேமக்களின் அரசாகவே இருக்கும் என்றும் ஜெயலலிதா கூறியுள்ளார். அவர் மேலும் கூறியிருப்பதாவது:
ரூ. 5,000க்கு மேல் சம்பளம் உள்ளவர்களுக்கு ரேசன் கடைகளில் எச் முத்திரை குத்தி அரிசி வழங்கப்படாது என்றுவெளியிடப்பட்ட அறிவிப்பு உடனடியாக ரத்து செய்யப்படுகிறது. உடனடியாக அனைவருக்கும் ரேசன் அரிசிவழங்கும் வகையில் எச் முத்திரை குத்தப்பட்டவர்களுக்கு புதிய அரிசி கார்டு வழங்கப்படும்.
எச் முத்திரை பதிக்கும் முறை முழுமையாக ரத்து செய்யப்படுகிறது. ஏற்கனவே எச் முத்திரை பதிக்கப்பட்டகார்டுதாரர்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த பொருட்கள் மீண்டும் வழங்கப்படும். மாத வருவாய் ரூ. 5000என்ற வருவாய் வரம்பும் நீக்கப்படுகிறது.
கட்டாய மதமாற்றத் தடை சட்டத்தை ரத்து செய்வதற்கு அவசரச் சட்டம் பிறப்பிக்கப்படும்.
வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதையடுத்து அரசு ஊழியர்களுக்கு எதிராக எடுக்கப்பட்ட எல்லா நடவடிக்கைகளும்ரத்து செய்யப்படும், அவர்கள் மீதான வழக்குகள், வழங்கப்பட்ட தண்டனைகளும் ரத்து செய்யப்படுகிறது.
அரசு ஊழியர் வேலை நிறுத்தத்தைத் தூண்டியதாக திமுக தலைவர் கருணாநிதி, காங்கிரஸ் முன்னாள்தலைவர் இளங்கோவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் செயலாளர் வரதராஜன், இந்திய கம்யூனிஸ்ட்செயலாளர் நல்லகண்ணு உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் மீது எஸ்மா, டெஸ்மா சட்டத்தின்கீழ் போடப்பட்ட அனைத்து வழக்குகளும் வாபஸ் பெறப்படும்.
விவசாயிகளுக்கு முழுமையாக இலவச மின்சாரம் வழங்கப்படும். அதே போல இந்து ஆசிரியர் என்.ராம்உள்ளிட்ட அனைத்துப் பத்திரிக்கையாளர்கள் மீதும் போடப்பட்ட 40 அவமதிப்பு வழக்குகளும் உடனடியாகவாபஸ் பெறப்படும். பதிலுக்கு பத்திரிக்கைகள் நியாயமான செய்திகள் வெளியிடும் என நம்புகிறேன்.இல்லாவிட்டால் மக்கள் மத்தியில் தவறான கருத்து பரவும். அதைத் தவிர்க்க எனதுநல்லெண்ணத்தைப் புரிந்து கொண்டு பத்திரிக்கைகள் நடந்து கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
கடந்த திமுக அரசு செய்துவிட்டுப் போன நிதிக் குளறுபடிகள், நிதிப் பற்றாக்குறையால் தான்சலுகைகள் திரும்பப் பெறப்பட்டன. ஆனால், இப்போது மக்களின் உணர்வுகளுக்கு மதிப்புகொடுத்து அவை மீண்டும் அமலாக்கப்படும்.
இவ்வாறு ஜெயலலிதா தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
நிதி பற்றாக்குறை காரணமாகவே இந்த சலுகைகளை ரத்து செய்வதாக முன்பு அறிவித்திருந்த ஜெயலலிதா தற்போதுதான் மேற்கொண்ட அனைத்து நடவடிக்கைகளையும் ரத்து செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அதே நேரத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தமிழ் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன், நக்கீரன்கோபால் ஆகியோர் மீது பொடா சட்டத்தின் கீழ் போடப்பட்ட வழக்குகள் குறித்து ஜெயலலிதா எந்த அறிவிப்பும்வெளியிடவில்லை.
-
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக












Click it and Unblock the Notifications