சுகாதாரத்துறை அமைச்சராக பொறுப்பேற்றார் அன்புமணி

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்ட டாக்டர் ராமதாஸின் மகன் டாக்டர் அன்புமணி இன்று தனதுபொறுப்பை ஏற்றுக் கொண்டார்.

அவரை ராமதாஸ் அழைத்துச் சென்று இருக்கையில் அமர வைத்தார். அப்போது ராமதாஸின் மனைவியும்உடனிருந்தார்.

இதேபோல, பாமகவின் இன்னொரு அமைச்சரான ஆர்.வேலு, ரயில்வே இணை அமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் வேலு பேசுகையில், ரயில் விபத்துக்களைத் தடுக்க முன்னுரிமைகொடுக்கப்படும். ரயில்கள் நேரம் தவறாமல் வந்து செல்ல நடவடிக்கை எடுக்கப்படும்.

ரயில் நிலையங்களில் தூய்மைக்கும் முக்கியத்துவம் தருவேன். தரமான, மேம்பட்ட ரயில் சேவையை அளிக்கஉறுதியுடன் செயல்படுவோம் என்றார்.

திமுகவுக்கு ராமதாஸ் ஆதரவு

அமைச்சரவை விஷயத்தில் திமுகவுக்கு தந்த உறுதிமொழியை காங்கிரஸ் காப்பாற்றியிருக்க வேண்டும் என பா.ம.க. நிறுவனர்டாக்டர் ராமதாஸ் கூறினார்.

இன்று சென்னை திரும்பிய அவர் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

திமுகவுக்கு உறுதிமொழியைத் தந்துவிட்டு பின்னர் அதிலிருந்து விலகிச் சென்றது காங்கிரசின் தவறு தான். தவறை அவர்கள்திருத்திக் கொள்வார்கள் என்று நினைக்கிறேன். இதனால் திமுக அமைச்சர்கள் விரைவில் பதவியேற்க வழி ஏற்படும்என்றார்.

அன்புமணிக்கு பிரமாண்ட வரவேற்பு:

இந் நிலையில் மத்திய அமைச்சர்களாகி நாளை சென்னை திரும்பும் டாக்டர் அன்புமணி, ஆர்.வேலு ஆகியோருக்கு விமான நிலையத்தில்பிரமாண்டமான வரவேற்பு கொடுக்க பா.ம.க. திட்டமிட்டுள்ளது.

ராமதாஸின் மகனான அன்புமணிக்கு சுகாதாரத்துறை கேபினட் அமைச்சர் பதவியும், அரக்கோணம் ஆர். வேலுவுக்கு ரயில்வேஇணை அமைச்சர் பொறுப்பும் வழங்கப்பட்டுள்ளது.

விமான நிலைய வரவேற்புக்குப் பின்னர் இருவருக்கும் திண்டிவனத்தலும் மாபெரும் வரவேற்பு அளிக்க திட்டமிட்டுள்ளது பா.ம.க.

இட ஒதுகீட்டுப் போராட்டத்தில் உயிர் நீத்த வன்னிய சமூக தியாகிகளின் நினைவிடங்களுக்குச் சென்று இருவரும் அஞ்சலி செலுத்தவும்ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+