கர்நாடக முதல்வராக தரம்சிங் பதவியேற்பு
பெங்களூர்:
கர்நாடக முதல்வராக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தரம்சிங்கும், துணை முதல்வராக மதசார்பற்றஜனதா தளத்தைச் சேர்ந்த சித்தராமையாவும் இன்று பதவியேற்றுக் கொண்டனர்.
ராஜ்பவனில் நடந்த எளிமையான நிகழ்ச்சியில் அவர்களுக்கு கவர்னர் சதுர்வேதி பதவிப் பிரமாணம்செய்து வைத்தார்.
யாருக்கும் மெஜாரிட்டி கிடைக்காததால் காங்கிரசும் தேவே கெளடாவின் மதசார்பற்ற ஜனதா தளமும்இணைந்து கூட்டணி ஆட்சி அமைத்துள்ளன.
நாடாளுமன்றத் தேர்தலுடன் கர்நாடகத்துக்கு சட்டமன்றத் தேர்தலும் நடந்தது. இதில் 78 இடங்களைபா.ஜ.க. வென்றாலும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. காங்கிரஸ் 65 இடங்களுடன் இரண்டாவதுஇடத்துக்குத் தள்ளப்பட்டது. மதசார்பற்ற ஜனதா தளம் 58 எம்.எல்.ஏக்களுடன் மூன்றாவதுஇடத்தைப் பிடித்தது.
இதையடுத்து ஆட்சியமைப்பதில் போட்டா போட்டி ஏற்பட்டது. ஜனதா தளத்தின் உதவியுடன்பா.ஜ.க. ஆட்சியமைக்க முயன்றது. ஆனால், அதற்கு தேவே கெளடாவின் ஆதரவு கிடைக்கவில்லை.
நாங்களே ஆட்சியமைப்போம், காங்கிரஸ் எங்களை ஆதரிக்க வேண்டும் என கெளடா கோரிவந்தார். இதனால் சிக்கல் எழுந்தது. கெளடாவின் கோரிக்கையை காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி ஏற்கவில்லை.
இருவரும் சேர்ந்து ஆட்சியமைப்போம், துணை முதல்வர் பதவியை மதசார்பற்ற ஜனதா தளத்துக்குவிட்டுத் தருவோம், ஆனால், முதல்வர் பதவி காங்கிரஸ் வசம் தான இருக்கும் என சோனியாகூறிவிட்டார்.
இதனால் கடந்த இரு வாரங்களாக பிரச்சனை தொடர்ந்தது. இறுதியில் காங்கிரசுடன் இணைந்துகூட்டணி ஆட்சியமைக்கவும், துணை முதல்வர் பொறுப்பை ஏற்கவும் கெளடா முன் வந்தார்.
இதையடுத்து இன்று இக் கூட்டணி அரசு பதவியேற்றது. மூத்த காங்கிரஸ் தலைவர் தரம்சிங்முதல்வராக பதவியேற்றார். மதசார்பற்ற ஜனதா தளத்தின் தலைவர்களில் ஒருவரான சித்தராமையாதுணை முதல்வராக பொறுப்பேற்றார். இவர் ஜே.எச். படேலின் அரசிலும் துணை முதல்வராகஇருந்தது குறிப்பிடத்தக்கது.
இரு கட்சிகளுக்கும் இடையே ஏற்பட்டுள்ள உடன்பாட்டின்படி, காங்கிரசுக்கு 16 அமைச்சர்களும்மதசார்பற்ற ஜனதா தளத்துக்கு 17 அமைச்சர்களும் ஒதுக்கப்படுவார்கள்.
-
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications