தூத்துக்குடி அருகே இஸ்லாமுக்கு மாறிய 6 தலித்கள்
தூத்துக்குடி:
வறுமை, சமூகப் புறக்கணிப்பு ஆகிய காரணத்தினால், தூத்துக்குடி அருகே தலித் சமுதாயத்தைச் சேர்ந்த 6 பேர்இஸ்லாமிய மதத்திற்கு மாறியுள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளம் அருகே உள்ளது மேல்மந்தை கிராமம். சொற்ப வீடுகளே உள்ள இந்தக்கிராமத்தில் 200 தலித் சமுதாயத்தினர் வசித்து வருகிறார்கள்.
கூலி வேலை பார்த்து வரும் இவர்களுக்கு வறுமைதான் நிரந்தரச் சொத்து. உள்ளூர் உப்புக் கம்பெனியில் வேலைகிடைத்தால் பார்ப்பார்கள், அது இல்லாத நேரத்தில், கருவேல மரங்களை வெட்டி விற்று பணம் சம்பாதிப்பார்கள்.
வறுமையுடன், சமூக புறக்கணிப்பும் சேர்ந்து கொண்டு இவர்களைப் பாடாய்ப் படுத்தியது. உயர் ஜாதியினரின்தீண்டாமை நடவடிக்கைகளால் வெறுத்துப் போன இந்தக் கிராமத்தைச் சேர்ந்த 6 பேர் இஸ்லாமுக்கு மாறியுள்ளனர்.
மே 23ம் தேதி இந்த மத மாற்றம் நடந்துள்ளது. ஏர்வாடி, தஞ்சாவூர், தேனியிலிருந்து 20க்கும் மேற்பட்ட முஸ்லீம்மதத்தினர் இந்த கிராமத்திற்கு வந்தனர். கிராமத்தில் இருந்த அனைவருக்கும் பிரியாணி பொட்டலங்கள்வழங்கப்பட்டன. பின்னர் இஸ்லாம் குறித்து போதனை செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து 6 தலித்கள்இஸ்லாமுக்கு மாறினர்.
சுதாகர், சுப்பையா, முரளி, பழனி, கோட்டைசாமி, நவநீத கிருஷ்ணன் ஆகியோர்தான் மதம் மாறிய தலித்கள்ஆவர். எங்களை சமமாக நினைக்காத மதம் எனக்குத் தேவையில்லை. அதனால்தான் இஸ்லாமுக்கு மாறினேன்என்று சுதாகர் தெரிவித்தார்.
இந்த மதமாற்ற சம்பவத்தை இந்து முன்னணி அமைப்பு கண்டித்துள்ளது. கட்டாய மதமாற்ற தடை சட்டத்தை தமிழகஅரசு விலக்கியதால்தான் இதுபோல நடந்துள்ளதாக அது தெரிவித்துள்ளது. ஆனால் இந்த கிராமத்திற்கு விரைந்துவந்த அரசு அதிகாரிகள், மதமாற்றம் கட்டாயப்படுத்தப்பட்டு நடைபெறவில்லை, அவர்களாகவேதான் மதம்மாறியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
6 தலித்களைத் தொடர்ந்து கிராமத்தில் உள்ள மற்ற தலித் மக்களும் விரைவில் மதம் மாறத் தயாராகி வருவதாகக்கூறப்படுகிறது.
-
ராஜ்யசபா சீட்.. ஓகே சொன்ன விஜய்! 3 மாதங்களில் 2 எம்பிக்கள்! கணக்கு போட்டு தூக்கிய காங்கிரஸ்! -
விஜய் அரசில் புதிய சகாப்தம்.. ஒரு ரூபாய் லஞ்சம் இன்றி 171 வணிகவரி அதிகாரிகளுக்கு பதவி உயர்வு! -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
கோட்டையில் முதல்வர் விஜய்யின் அசுர வேகம்.. பரந்தூர், FSI, ஹூண்டாய் மெகா டீல்.. ஒரே நாளில் அதிரடி! -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
அன்னதானம் எங்க போடறீங்க.. வாட்டர் ஸ்பாட் எங்க.. அதிகாரிகளை கேள்விகளால் துளைத்த ரமேஷ் -
விஜய்யை பார்க்க வேண்டாம்.. ஸ்டாலினை கைவிட்டு இருக்க கூடாது.. ராகுலிடம் எகிறிய ப்ரியங்கா காந்தி! -
மகள் கல்யாணத்திற்காக முதல்வர் விஜய்யை சந்தித்த குஷ்பு குடும்பம்.. வெளியே வந்ததும் உருக்கமான பதிவு -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது












Click it and Unblock the Notifications