சட்டசபை தேர்தலிலும் ஜெ. தோற்பது உறுதி: வைகோ
தஞ்சாவூர்:
2006ம் ஆண்டு நடைபெறவிருக்கும் சட்டசபைத் தேர்தலிலும் முதல்வர் ஜெயலலிதா தோற்பது உறுதி என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
காவிரி டெல்டா விவசாயிகளின் உரிமைகளைப் பாதுகாக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் என ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் செயல்திட்டத்தில் கூறப்பட்டுள்ளது. எனவே காவிரி ஆணையக் கூட்டத்தை உடனடியாகக் கூட்டி, ஜூன் 12-ம் தேதி பாசனத்துக்காகத் தண்ணீர் திறந்துவிடுவது என முன்பிருந்த நிலையை மன்மோகன் சிங் ஏற்படுத்தித் தர வேண்டும்.
ஜெயலலிதா வெளியிடும் கட்டணக்குறைப்புகள் உள்ளிட்ட அறிவிப்புகளை வரவேற்கிறோம். தனது நடவடிக்கைகளை திரும்பப் பெறுவதன் மூலம், தான் செய்தது தவறு என்று ஒப்புக்கொண்டிருக்கிறார்.
சட்டசபைக்கு 2006-ம் ஆண்டில் தேர்தலை நடத்தினாலும், அதற்கு முன்னரே நடத்தினாலும் ஜெயலலிதா படுதோல்வியடைவது உறுதி.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு நிலையான அரசாக விளங்கும். பொடா சட்டம் கட்டாயம் திரும்பப் பெறப்படும். இலங்கையில் அமைதிப் பேச்சுவார்த்தை வெற்றி பெற இந்தியா தன் பங்கையாற்ற வேண்டும். புலிகள் மீதான தடையை நீக்குவது இன்றியமையாததாகும்.
இக் கோரிக்கையை மத்திய அரசு இப்போது ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் காலப் போக்கில் தனது கருத்தை மாற்றிக்கொள்ள வாய்ப்பிருக்கிறது என்றார் வைகோ.
சென்னை உயர் நீதிமன்றம் அனுமதியளித்தயைடுத்து வைகோ இன்றிரவு அமெரிக்கா செல்கிறார்.
-
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications