நெருங்குகிறது ஜூன் 12: கவலையில் காவிரி டெல்டா விவசாயிகள்சென்னை:மேட்டூர் அணை திறக்கப்படும் ஜூன் 12ம் தேதியை எதிர்நோக்கி காவிரி பாசனப் பகுதி விவசாயிகள் கவலையுடன் காத்துள்ளனர். அணையில் போதிய நீர் இல்லாததால் திட்டமிட்டபடி அணை திறக்கப்படுமா என்ற சந்தேகம் அவர்கள் மனதில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12ம் தேதி குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணை திறக்கப்படும். ஆனால் இந்த முறை திட்டமிட்ட நாளில் அணை திறக்கப்படாது என்ற நிலை உள்ளது. அணையில் தற்போது 9 டிஎம்சி தண்ணீர் மட்டுமே உள்ளது. குறைந்தபட்ச இருப்பான 6 டிஎம்சியை விட 3 டிஎம்சி தண்ணீர் மட்டுமே கூடுதலாக உள்ளது.இந் நிலையில் அணையைத் திறப்பது சாத்தியமில்லாதது என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறி வருகின்றனர். அணையை திறக்க வேண்டுமானால் 35 டிஎம்சி தண்ணீர் இருக்க வேண்டும். தற்போது மேட்டூர் அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் நல்ல மழை பெய்து வருவதால் அணைக்கு கிட்டத்தட்ட விநாடிக்கு 10,000 கன அடிநீர் வந்து கொண்டுள்ளது. இருப்பினும், கர்நாடகம் தண்ணீர் விட்டால்தான் ஜூன் 12ம் தேதிக்குள் ஓரளவு தண்ணீரைத் தேக்கி வைக்க முடியும் என்றும் பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள்.குறுவைப் பயிரைப் பயிடுவதற்கு முதலில் 45 முதல் 50 டிஎம்சி தண்ணீர் தேவைப்படும். அதன் பின்னர் பயிரை பராமரிப்பதற்கு மேலும் 45 டிஎம்சி தண்ணீர் தேவைப்படும். மொத்தமாக 100 டிஎம்சி தண்ணீர் குறுவை சாகுபடிக்குத் தேவை.ஆனால் குறுகிய காலத்தில் இத்தனை தண்ணீர் கிடைப்பது சாத்தியமா என்றால் வாய்ப்பே இல்லை என்றே அதிகாரிகளும், விவசாயிகளும் கூறுகிறார்கள். இதற்கு என்னதான் தீர்வு? கர்நாடகம், இயற்கையும் வழிவிட்டால்தான் பயிர்களைக் காப்பாற்ற முடியும் என்கிறார் தஞ்சை காவிரி பாசனப் பகுதி விவசாயிகள் சங்கப் பொதுச் செயலாளர் ரங்கநாதன்.குறுவைப் பயிரை நாம் முற்றிலும் ரத்து செய்து விட வேண்டும். தென் மேற்குப் பருவ மழைக் காலத்தின்போது கிடைக்கும் தண்ணீரை சேமித்து வைக்க வேண்டும். பின்னர் வரும் சம்பா சாகுபடிக் காலத்தின்போது அதை பயன்படுத்தி சம்பாவை சாகுபடி செய்யலாம். கூடுதல் நீர் இருந்தால், குறிப்பிட்ட அளவில் குறுவையை சாகுபடி செய்யலாம். இதுதான் நமது பிரச்சினைகளுக்கு ஒரே தீர்வு என்கிறார் ரங்கநாதன்.இதற்கிடையே, கர்நாடகத்தில் புதிதாக அமையவுள்ள காங்கிரஸ்-ஜனதா தளம் கூட்டணி அரசு தமிழக காவிரி விவசாயிகளின் கவலையை மனதில் கொண்டு, உரிய நீரை குறிப்பிட்ட காலத்திற்குள் வழங்க வகை செய்ய வேண்டும் என்று பாசனப் பகுதி விவசாயிகள் எதிர்பார்க்கிறார்கள்.விவசாயிகள் மேல் அக்கறை கொண்டவர் முன்னாள் பிரதமர் தேவெ கெளடா. அவரது தலைமையிலான மதச்சார்பற்ற ஜனதாதளம்தான் தற்போது காங்கிரஸூடன் கூட்டணி ஆட்சி அமைக்கவுள்ளது. எனவே தமிழக விவசாயிகளின் நிலையை உணர்ந்து உரிய நேரத்தில் கர்நாடகம் தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று விவசாயிகள் எதிர்பார்க்கிறார்கள்.கண்களில் கவலையையும், கனவுகளில் காவிரியையும் தேக்கிக் கொண்டு எதிர்காலம் குறித்த யோசனையுடன் காத்துள்ளனர் காவிரி டெல்டா விவசாயிகள்.
சென்னை:
மேட்டூர் அணை திறக்கப்படும் ஜூன் 12ம் தேதியை எதிர்நோக்கி காவிரி பாசனப் பகுதி விவசாயிகள் கவலையுடன் காத்துள்ளனர். அணையில் போதிய நீர் இல்லாததால் திட்டமிட்டபடி அணை திறக்கப்படுமா என்ற சந்தேகம் அவர்கள் மனதில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12ம் தேதி குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணை திறக்கப்படும். ஆனால் இந்த முறை திட்டமிட்ட நாளில் அணை திறக்கப்படாது என்ற நிலை உள்ளது. அணையில் தற்போது 9 டிஎம்சி தண்ணீர் மட்டுமே உள்ளது. குறைந்தபட்ச இருப்பான 6 டிஎம்சியை விட 3 டிஎம்சி தண்ணீர் மட்டுமே கூடுதலாக உள்ளது.
இந் நிலையில் அணையைத் திறப்பது சாத்தியமில்லாதது என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறி வருகின்றனர். அணையை திறக்க வேண்டுமானால் 35 டிஎம்சி தண்ணீர் இருக்க வேண்டும்.
தற்போது மேட்டூர் அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் நல்ல மழை பெய்து வருவதால் அணைக்கு கிட்டத்தட்ட விநாடிக்கு 10,000 கன அடிநீர் வந்து கொண்டுள்ளது.
இருப்பினும், கர்நாடகம் தண்ணீர் விட்டால்தான் ஜூன் 12ம் தேதிக்குள் ஓரளவு தண்ணீரைத் தேக்கி வைக்க முடியும் என்றும் பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள்.
குறுவைப் பயிரைப் பயிடுவதற்கு முதலில் 45 முதல் 50 டிஎம்சி தண்ணீர் தேவைப்படும். அதன் பின்னர் பயிரை பராமரிப்பதற்கு மேலும் 45 டிஎம்சி தண்ணீர் தேவைப்படும். மொத்தமாக 100 டிஎம்சி தண்ணீர் குறுவை சாகுபடிக்குத் தேவை.
ஆனால் குறுகிய காலத்தில் இத்தனை தண்ணீர் கிடைப்பது சாத்தியமா என்றால் வாய்ப்பே இல்லை என்றே அதிகாரிகளும், விவசாயிகளும் கூறுகிறார்கள். இதற்கு என்னதான் தீர்வு? கர்நாடகம், இயற்கையும் வழிவிட்டால்தான் பயிர்களைக் காப்பாற்ற முடியும் என்கிறார் தஞ்சை காவிரி பாசனப் பகுதி விவசாயிகள் சங்கப் பொதுச் செயலாளர் ரங்கநாதன்.
குறுவைப் பயிரை நாம் முற்றிலும் ரத்து செய்து விட வேண்டும். தென் மேற்குப் பருவ மழைக் காலத்தின்போது கிடைக்கும் தண்ணீரை சேமித்து வைக்க வேண்டும். பின்னர் வரும் சம்பா சாகுபடிக் காலத்தின்போது அதை பயன்படுத்தி சம்பாவை சாகுபடி செய்யலாம்.
கூடுதல் நீர் இருந்தால், குறிப்பிட்ட அளவில் குறுவையை சாகுபடி செய்யலாம். இதுதான் நமது பிரச்சினைகளுக்கு ஒரே தீர்வு என்கிறார் ரங்கநாதன்.
இதற்கிடையே, கர்நாடகத்தில் புதிதாக அமையவுள்ள காங்கிரஸ்-ஜனதா தளம் கூட்டணி அரசு தமிழக காவிரி விவசாயிகளின் கவலையை மனதில் கொண்டு, உரிய நீரை குறிப்பிட்ட காலத்திற்குள் வழங்க வகை செய்ய வேண்டும் என்று பாசனப் பகுதி விவசாயிகள் எதிர்பார்க்கிறார்கள்.
விவசாயிகள் மேல் அக்கறை கொண்டவர் முன்னாள் பிரதமர் தேவெ கெளடா. அவரது தலைமையிலான மதச்சார்பற்ற ஜனதாதளம்தான் தற்போது காங்கிரஸூடன் கூட்டணி ஆட்சி அமைக்கவுள்ளது. எனவே தமிழக விவசாயிகளின் நிலையை உணர்ந்து உரிய நேரத்தில் கர்நாடகம் தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று விவசாயிகள் எதிர்பார்க்கிறார்கள்.
கண்களில் கவலையையும், கனவுகளில் காவிரியையும் தேக்கிக் கொண்டு எதிர்காலம் குறித்த யோசனையுடன் காத்துள்ளனர் காவிரி டெல்டா விவசாயிகள்.
-
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்!












Click it and Unblock the Notifications