-ஜெ. கோரிக்கை; தரம்சிங் கருத்து கூற மறுப்பு
Subscribe to Oneindia Tamil
பெங்களூர்:
காவிரி ஆணையத்தை உடனடியாக கூட்ட வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா கோரியிருப்பது குறித்து கருத்துக் கூற கர்நாடக முதல்வர் தரம்சிங் மறுத்து விட்டார்.
காவிரி ஆணையத்தின் கூட்டத்தை உடனடியாக கூட்டி தமிழகத்திற்கு கர்நாடகம் தண்ணீர் திறந்து விட ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கோரி பிரதமர் மன்மோகன் சிங்குக்கு ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.
இது குறித்து பெங்களூரில் நடந்த அமைச்சர்கள் பதவியேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தரம்சிங்கிடம் நிருபர்கள் கேட்டபோது, இதுகுறித்து பதில் கூற விரும்பவில்லை என்று தெரிவித்தார்.
மேலும், திமுக தலைமையிலான ஜனநாயக முற்போக்குக் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் அடங்கிய குழு பெங்களூர் வரவுள்ளது குறித்து கேட்டபோது, தூதுக் குழுவினர் வருகையை வரவேற்கிறேன், அவர்கள் வந்து என்னுடன் பேசலாம் என்றார் தரம்சிங்.












Click it and Unblock the Notifications