ராவ் உள்பட விரைவில் ஆளுநர்கள் மாற்றம்?
டெல்லி:
உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் இன்று ஜனாதிபதி அப்துல் கலாமை ராஷ்ட்ரபதி பவனில்சந்தித்துப் பேசினார். மாநில ஆளுநர்களை மாற்றுவது குறித்து கலாமுடன் அவர் ஆலோசனைநடத்தியதாகத் தெரிகிறது.
இதையடுத்து பாண்டிச்சேரி ஆளுநர் என்.என்.ஜா இன்று பதவியை ராஜினாமா செய்துவிட்டார்.
பல மாநிலங்களில் பா.ஜ.க. ஆட்சியின்போது நியமிக்கப்பட்ட ஆளுநர் பதவியில் உள்ளனர்.இவர்களில் என்.என். ஜா உள்பட பலர் ஆர்.எஸ்.எஸ்சை சேர்ந்தவர்கள்.
அவர்கள் தாங்களாகவே ராஜினாமா செய்வார்கள் என காங்கிரஸ் கூட்டணி அரசு எதிர்பார்த்தது.ஆனால், அவர்கள் விலகவில்லை. இதையடுத்து அவர்களை நீக்கிவிட்டு புதிய ஆளுநர்கள்நியமிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
தமிழக ஆளுநர் ராம்மோகன் ராவும் நீக்கப்படவுள்ள ஆளுநர்கள் பட்டியலில் உள்ளதாகத்தெரிகிறது.
இந் நிலையில் இன்று கலாமை பாட்டீல் சந்தித்துப் பேசிவிட்டுத் திரும்பிய சிறிது நேரத்தில்என்.என்.ஜா தனது ராஜினாமா கடிதத்தை ஜனாதிபதிக்கு பேக்ஸ் செய்துள்ளார்.
மக்களவைத் தேர்தலின்போது அவர் பாஜக-அதிமுக கூட்டணிக்கு ஆதரவாக செயல்பட்டதாக புகார்கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.
முதல்வர் ரங்கசாமியின் தொலைபேசியை என்.என். ஜா ஒட்டு கேட்பதாக பாண்டிச்சேரி காங்கிரஸ்எம்.எல்.ஏ. கமலக்கண்ணன் குற்றம் சாட்டியதையடுத்து அம் மாநிலத்தில பரபரப்பு நிலவியது. இந்நிலையில் பதவியை ஜா ராஜினாமா செய்துள்ளார்.
இவர் முன்னாள் துணைப் பிரதமர் அத்வானிக்கு நெருக்கமானவராவார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி












Click it and Unblock the Notifications