அதிமுகவினர்- போலீஸ் மோதல்

Subscribe to Oneindia Tamil

பொன்னேரி:

சென்னை அருகே நடந்த சாராய வேட்டையில் அதிமுகவினருக்கும் போலீஸாருக்கும் இடையே மோதல்ஏற்பட்டது. இதில் இன்ஸ்பெக்டர் உள்பட இருவர் காயமடைந்தனர்.

சென்னை அருகே பொன்னேரி திருஆயர்வாடியில் மதுவிலக்கு காவல் நிலையம் உள்ளது. இந்தக் காவல்நிலையத்தைச் சேர்ந்த போலீஸார், இன்ஸ்பெக்டர் அழகுசுந்தரம் தலைமையில் சோழவரம் அருகே நத்தம் பகுதியில்சாராய வேட்டைக்குச் சென்றனர்.

திரும்பி வரும்போது நள்ளிரவு 12.30 மணியளவில் பஞ்செட்டி அருகே வேகமாக வந்த லாரியை மடக்கிவிசாரித்தனர். அதில் இருந்தவர்கள், உறவினர் வீட்டு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து விட்டு திரும்புவதாகவும், லாரியில்சிமெண்ட் மூட்டைகள் இருப்பதாகவும் கூறினர்.

ஆனால் சாராயம் காய்ச்சுவதற்கு வெல்ல மூட்டைகளைக் கடத்திச் செல்வதாக சந்தேகப்பட்ட இன்ஸ்பெக்டர்அழகுசுந்தரம் லாரியை சோதனையிட வேண்டும் என்றார். இதை லாரி டிரைவர் பூபாலன் மறுக்கவே இருவருக்கும்இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது பூபாலனை இன்ஸ்பெக்டர் அடித்தார்.

இதையடுத்து பூபாலன் பதிலுக்கு லாரியில் இருந்த இரும்புக் கம்பியை எடுத்து தாக்கியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த போலீஸார் ஒன்று சேர்ந்து பூபாலனை அடித்து நொறுக்கினர். இந்த பூபாலன், நத்தம்ஊராட்சி மன்றத் தலைவரும் அதிமுக பிரமுகருமான ரவிச்சந்திரனின் அண்ணன் ஆவார்.

பூபாலன் தாக்கப்பட்டதை அறிந்த ரவிச்சந்திரன் தனது ஆதரவாளர்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டார். இன்றுஅதிகாலை 5 மணி வரை இந்த சாலை மறியல் நீடித்தது.

தகவல் அறிந்த திருவள்ளூர் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ரங்கராஜ், பொன்னேரி டி.எஸ்.பி. முத்துநல்லியப்பன் ஆகியோர் மறியல் நடந்த இடத்துக்கு விரைந்து அவர்களை கலைந்து போகச் செய்தனர்.

பின்னர் பூபாலன் மற்றும் இன்ஸ்பெக்டர்அழகுசுந்தரம் ஆகியோர் பொன்னேரி மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டனர். இருவரும் தனித்தனியாக இந்தச் சம்பவம் தொடர்பாக புகார் கொடுத்துள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+