தலைமை ஆசிரியர் இடமாறுதலுக்கு தடை
சென்னை:
பள்ளியின் தேர்ச்சி விகிதம் 60 சதவீதத்துக்கும் குறைவாக இருந்ததைக் காரணம் காட்டி, தலைமை ஆசிரியரைஇடம் மாறுதல் செய்த தமிழக அரசின் உத்தரவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது.
திருநெல்வேலி மாவட்டம் புளியங்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கடந்த வருடம் தேர்ச்சி விகிதம்குறைவாக இருந்ததால் அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் அப்துல் மாலிக் ஏர்வாடியில் உள்ள மேல்நிலைப்பள்ளிக்கு மாற்றப்பட்டார்.
இதை எதிர்த்து அவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். அந்த மனுவில்,
கடந்த கல்வியாண்டில் எனது பள்ளியில் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 51 சதவீதமாக இருந்ததைக் காரணம்காட்டி என்னை வேறு ஊருக்கு அரசு மாறுதல் செய்துள்ளது.
ஆசிரியர் பணியைச் சிறப்பாக செய்ததால்தான் 2001-ம் ஆண்டில் எனக்கு தலைமை ஆசிரியராகப் பதவி உயர்வுகிடைத்தது. அரசின் தற்போது பிறப்பித்த இந்த மாறுதல் உத்தரவால் எனக்கு கெட்ட பெயர் ஏற்பட்டுள்ளது.
எனது பள்ளியில் வேதியியல் பாடத்தில் 45 சதவீத தேர்ச்சிதான் கிடைத்தது. இதனால் வேதியியல் ஆசிரியைமணிமேகலை வேறு பள்ளிக்கு மாற்றப்பட்டார். அவருக்கு பதிலாக மோகன் என்ற ஆசிரியர்நியமிக்கப்பட்டுள்ளார். அவர் பணியாற்றிய பள்ளியில் 37 சதவீத தேர்ச்சியே வேதியியல் பாடத்தில் கிடைத்தது.
45 சதவீதத் தேர்ச்சி கொடுத்த ஆசிரியையை மாற்றிவிட்டு, 37 சதவீதத் தேர்ச்சி மட்டும் கொடுத்த ஆசிரியரைநியமிப்பது வேடிக்கையாக உள்ளது. அரசின் இத்தகைய நடவடிக்கைகள் மாணவர்களின் நலனுக்கு ஏற்றதல்லஎன்று மனுவில் கூறப்பட்டுள்ளது.
மனுவை விசாரித்த நீதிபதி பாலசுப்பிரமணியன் அரசின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்தார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
5,000 பேர் மட்டும் தான்.. திருச்சி கிழக்கில் விஜய் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு -
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
திருவள்ளுவருக்கு காவி பெயிண்ட்! முதல்வர் தயங்குவது ஏன்? விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் கேள்வி -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ 2500 எப்போது? பட்டென அப்டேட் கொடுத்த மரியவில்சன்! 2 வாரங்கள் கழித்தா? -
"டிவிகேவால் தான் கரு கலைந்ததா?".. இதோடு உங்க நாடகத்தை நிறுத்திக்கோங்க!" ஜூலிக்கு நடிகர் வார்னிங் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன?












Click it and Unblock the Notifications